நெருங்கி வரும் சட்டசபை தேர்தல்… வேட்பாளர்களை அறிவித்த முதலமைச்சர்…

0
153

 

நெருங்கி வரும் சட்டசபை தேர்தல்… வேட்பாளர்களை அறிவித்த முதலமைச்சர்…

 

தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அவர்கள் தற்பொழுது அறிவித்துள்ளார்.

 

சில மாதங்களில் தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் மொத்தமாக 119 தொகுதிகள் உள்ளது. ஆட்சியை பிடிக்க பெரும்பான்மையாக மொத்தம் 60 இடங்கள் தேவைப்படும்.

 

இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தற்பொழுது முதல்வராக உள்ள சந்திரசேகர ராவ் அவர்களின் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து முதலமைச்சராக சந்திரசேகர ராவ் அவர்கள் பதவியேற்றார்.

 

மேலும் 2018ம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலிலும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியே வெற்றி பெற்றது. இதனால் இரண்டாவது முறையாக சந்திரசேகர ராவ் அவர்கள் முதலமைச்சராக பதவியேற்று தற்பொழுது தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து வருகிறார்.

 

இந்நிலையில் முதல்வர் சந்திரசேகரராவ் அவர்கள் சில மாதங்களில் நடக்கவிருக்கும் தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். இதில் மொத்தம் 115 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியலை முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் அறிவித்துள்ளார்.

 

இதில் தற்போது முதல்வராக இருக்கும் சந்திரசேகர ராவ் அவர்கள் நடக்கவிருக்கும் தெலுங்கானா சட்டசபை தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Previous articleமாநிலங்களவையில் 9 பேர் புதிதாக எம்.பி.களாக பதவியேற்பு… மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் பதவியேற்பு!!
Next articleஅமெரிக்காவில் பரபரப்பு..LGBTQ கொடியால் பெண் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார்!!