J
சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆட்சியில் அமர்ந்தது .கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக அந்தக் கட்சியின் தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார்.இதனைத் தொடர்ந்து சென்ற மாதம் 13-ஆம் தேதி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் கூடியது. நோய்த்தொற்று பரவல் காரணமாக, கோட்டையில் சரியான வசதி இல்லாத காரணத்தாலும், இந்த கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு கூட்டம் அங்கு நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில், தமிழக 16வது சட்டப்பேரவையின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடரானது நேற்றுடன் முடிவடைந்தது சுமார் 20 வருடங்களுக்கு பின்னர் பாஜக தமிழக சட்டப்பேரவையில் 4 சட்டசபை உறுப்பினர்களை பெற்றிருக்கிறது. அதில் ஒருவரான வானதி ஸ்ரீனிவாசன் சட்டமன்றத்தை 100% பயன்படுத்திக் கொண்டேன் என்று மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார். முதல் கூட்டத்தொடரில் அனுபவங்களை மிக விரிவாக வானதி ஸ்ரீனிவாசன் பதிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
அதாவது சட்ட சபையில் முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினர் உரையாற்றுவதை கன்னிப்பேச்சு என்று குறிப்பிடும் வழக்கம் இருந்துவருகிறது. இளம்பெண்களின் பெண்மையை குறிக்கும் இந்த வார்த்தைக்கு பதிலாக முதல் பேச்சு என்றும், முதல் முறை என்றும் குறிப்பிடுவது தான் பொருத்தமாக இருக்கும் என கோரிக்கை விடுத்தேன் என்னுடைய இந்த கோரிக்கையை பரிசீலனை செய்வதாக பேரவைத்தலைவர் பதில் அளித்து இருந்தார். ஆனாலும் கடைசி வரிகள் என்னுடைய கோரிக்கை ஏற்கப்படவில்லை என்ற வருத்தம் எனக்கு இருக்கத்தான் செய்கிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
அதோடு மட்டுமல்லாமல் தமிழக விடுதலை போராட்ட வீரர்கள் தொடர்பான தகவல்களை எல்லோரும் தெரிந்துகொள்ள வசதியாக அருங்காட்சியகம் அமைக்க வேண்டும், பெண்களுக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும், நியாய விலை கடைகளில் சமையலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும், போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தொகுதி மற்றும் மாவட்டம் மற்றும் மாநிலம் தழுவிய கோரிக்கைகளை சுட்டிக்காட்டி வானதி சீனிவாசன் இவ்வாறு பேசியிருக்கிறார்.
ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி வரை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்த முதலில் முடிவு செய்யப்பட்டு இருந்தது. இருந்தாலும் பல காரணங்களால் செப்டம்பர் மாதம் 13ம் தேதியுடன் சட்டப்பேரவை நிகழ்வுகளை முடித்துக் கொள்ளப் பட்டன. இந்த நாள் குறைப்பால் ஒரே நாளில் மூன்று அல்லது நான்கு துறைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதன் காரணமாக viva பேசும் உறுப்பினர்களுடைய எண்ணிக்கையும் குறைந்தது முடிவு செய்தபடி செப்டம்பர் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி வரையில் சட்டப்பேரவை நடைபெற்று இருந்தால் வேறு ஒரு மானிய கோரிக்கை விவாதத்தில் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். என்னை பொறுத்தவரையில் கிடைத்த வாய்ப்பை நூறு சதவீதம் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றேன் என கூறியிருக்கிறார் வானதி ஸ்ரீனிவாசன்.
மேலும் பேசிய அவர் சட்டப்பேரவை நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று எங்களுடைய கட்சியின் சார்பாக நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். மாநில தலைவர் அண்ணாமலை அவர்களும் இதனை வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் எங்களுடைய தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வோம் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் அதனை செயல்படுத்தவில்லை என கூறியிருக்கிறார்.
சட்டசபையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் பேசும் காணொளிகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அதனை அவர்கள் சமூக ஊடகங்களில் பகிர்கிறார்கள். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும் வீடியோக்கள் யாருக்கும் வழங்கப்படுவதில்லை என்று தெரிவித்திருக்கிறார் வானதி சீனிவாசன்.