பிப்ரவரி 2ஆம் தேதி கூடுகிறது! நடப்பு சட்டசபையின் கடைசி கூட்டத்தொடர்!

Photo of author

By Sakthi

பிப்ரவரி 2ஆம் தேதி கூடுகிறது! நடப்பு சட்டசபையின் கடைசி கூட்டத்தொடர்!

Sakthi

Updated on:

தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில், தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆட்சியின் இறுதி சட்டசபையின் கூட்டத் தொடர் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி கூட இருக்கிறது. கொரோனா தொற்றால் ஏற்பட்ட பயம் காரணமாக தற்போது நடைபெறவிருக்கும் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெற இருக்கிறது இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் என்ற காரணத்தால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இந்த கூட்டத் தொடரில் முதல் நாளில் உரையாற்ற இருக்கிறார். அவர் ஆற்றப் போகும் உரையில் அரசு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படும் என்று தெரிகிறது .அதோடு தமிழக அரசால் நிறைவேற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் புதிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நாளைய தினம் மாலை 4:30 அளவில் நடக்கவிருக்கிறது. பிப்ரவரி மாதம் 2ம் தேதி சட்டசபை கூட்டம் ஆரம்பிக்க இருக்கின்ற நிலையில், அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை செய்கின்றார். அந்த சமயத்தில் சட்டசபை கூட்டத்தொடரில் நடைபெறவிருக்கும் செயல்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்படலாம் என்று தெரிகிறது.