உதயநிதி அறக்கட்டளையின் சொத்துக்கள் முடக்கம்!! நிர்வாகி  மறுப்பு!!

0
265
Assets of Udhayanidhi Trust are frozen!! Admin Denial!!
Assets of Udhayanidhi Trust are frozen!! Admin Denial!!

உதயநிதி அறக்கட்டளையின் சொத்துக்கள் முடக்கம்!! நிர்வாகி  மறுப்பு!!

கடந்த சில நாட்களுக்கு முன்பாக சட்ட விரோதமாக பணபரிவர்த்தனை மேற்கொள்ளப் படுகிறது என வந்த புகாரின் அடிப்படையில் லைகா தயாரிப்பு நிறுவனத்தின் தொடர்புடைய 8 இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப் பட்டது. அந்த சோதனையின் போது விளையாட்டுத்துறை அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கும் லைகா நிறுவனத்திற்கும் இடையே கோடிக்கணக்கான பணப் பரிவர்த்தனை நடைபெற்றதற்கான ஆவணங்கள் கைப்பற்றப் பட்டதாக கூறப்படுகிறது.

அதனை அடிப்படையாக வைத்து உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் வீடு, உதயநிதியின் ரசிகர் மன்றம் மற்றும் உதயநிதி அறக்கட்டளை நிர்வாகி வழக்கறிஞர் பாபுவின் வீடு மற்றும் அலுவலகம் ஆகிய இடங்களில் அமலாக்கப் பிரிவினர் சோதனைகள் மேற்கொண்டனர். அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் உள்ள 34.7 லட்ச ரூபாயும்,  36.3 கோடி உள்ள அசையா சொத்துக்களும் முடக்கப் படுவதாக அமலாக்கத்துறையினர் கூறினர்.

இந்த செய்தி சமுக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது குறித்து உதயநிதி அறக்கட்டளை சார்பாக விளக்கம் அளிக்கப் பட்டது அதில். அமலாக்கத்துறையினர் முடக்கப் பட்டதாக கூறும் 36.3 கோடி அசையா சொத்துக்களுக்கும் உதயநிதி அறக்கட்டளைக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. இந்த தகவல்களில் உண்மையும் இல்லை. வங்கி கணக்கில் உள்ள ரூ.34.7 லட்சம் மட்டுமே அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இந்த பணத்திற்கான ஆவணங்களை சமர்பித்து அதை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் என கூறப்பட்டுள்ளது.

உதயநிதி அறக்கட்டளைக்கான வருமான வரி சரியாக செலுத்தப் பட்டு வருகிறது எனவும், இந்த அறக்கட்டளை ரசிகர்கள் மூலம் நடத்தப் படுகிறது இதற்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை எனவும் கூறப்படுகிறது.

Previous articleஇன்று முதல் விண்ணப்பிக்கலாம்!! +2 மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!!
Next articleபேருந்துகள் ஓடாது ஆட்டோ டாக்சி கட்டணம் உயர்வு!! மக்கள் கொந்தளிப்பு!!