மேஷம்
இன்று நாங்கள் திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் உண்டாகும் நாள், உடல் நலத்தில் கவனத்தை செலுத்துவது மிகவும் நன்று, தொழிலரீதியாக பயணமொன்று தாமதப்படுத்தலாம், மறதி அதிகரிக்கும்.
ரிஷபம்
இன்று தங்களுக்கு தடைகள் அதிகரிக்கும் நாள், தன்னம்பிக்கை குறையும், முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது, பேச்சில் கவனம் தேவை, ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்படும் ,நாசுக்காக நடந்து கொள்வது மிகவும் நன்று.
மிதுனம்
இன்று தங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாள், செய்தொழில் மிகவும் மந்தமாகயிருக்கும். அலைச்சல் சற்றே அதிகரிக்கும் குடும்பத்தினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலமாக விருப்பங்கள் நிறைவேறும்.
கடகம்
இன்று தங்களுக்கு மதிப்பும், மரியாதையும், அதிகரிக்கும் நாள், பொருளாதார பற்றாக்குறை நீங்கும். இடம் வாங்கும் யோகம் உண்டு, உத்தியோக முயற்சியில் வெளிநாட்டு நிறுவனங்களின் அழைப்பை ஏற்றுக்கொள்ள முன்வருவீர்கள்.
சிம்மம்
இன்று தங்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும் நாள், அன்பான நண்பர்களின் ஆதரவுடன் நல்ல வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்வீர்கள். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் சந்திப்பு கிடைக்கும்.
கன்னி
இன்று தங்களுக்கு துணிவும், தன்னம்பிக்கையும், அதிகரிக்கும் நாள், துயரங்கள் யாவும் விலகிச் செல்லும், கூட்டுத் தொழிலை தனித்தொழிலாக மாற்றலாமா? என சிந்திப்பீர்கள். சொத்துக்கள் தொடர்பான பஞ்சாயத்துக்கள் நல்லதொரு முடிவிற்கு வரும்.
துலாம்
இன்று தங்களுக்கு வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள், உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். திருமணத்தடை நீங்கும், வருமா? வராதா? என நினைத்த பணவரவொன்று கைக்கு வந்து சேரும்.
விருச்சிகம்
இன்று தங்களுக்கு பாராட்டும், புகழும், அதிகரிக்கும் நாள், பாசமிக்கவர்களின் நேசம் கிடைக்கும். நிகழ்கால தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நினைத்த காரியத்தை நினைத்த சமயத்தில் செய்து முடிப்பீர்கள்.
தனுசு
இன்று தங்களுக்கு முயற்சிகள் யாவும் கைகூடும் நாள், அறிவு நுட்பத்தால் மகத்தான காரியமொன்றை செய்து முடிப்பீர்கள்0 அரசியல்வாதிகளால் ஆதாயம் கிடைக்கும் தொழில் தொடர்வாக எடுத்த புது முயற்சிக்கு மாற்றினத்தவர்களின் உதவி கிடைக்கும்.
மகரம்
இன்று தங்களுக்கு கடிதம் மூலமாக கனிவான தகவலுடன் வந்து சேரும் நாள், நினைத்தது நிறைவேறி நிம்மதியடைவீர்கள். உத்யோகத்தில் உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும், வாகன பராமரிப்பு செலவு ஏற்படும்.
கும்பம்
இன்று தங்களுடைய இல்லத்திலும், உள்ளத்திலும், அமைதி அதிகரிக்கும் நாள், எடுத்த காரியங்கள் எளிதாக முடிவடையும்0 தொழிலில் லாபம் எதிர்பார்த்தவாறு இருக்கும். உடன்பிறப்புகள் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும்.
மீனம்
இன்று தாங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்ச்சியடையும் நாள், குடும்பத்தினர்களின் ஒத்துழைப்போடு ஏற்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களுடைய முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக திகழ்வார்கள்.