எதைப் பற்றி வேண்டுமானாலும் கேளுங்கள் சொல்கிறேன்!.. ஆனால் இதை மட்டும் நான் சொல்ல மாட்டேன்!. ரஜினி கூறிய பதில்?..

0
164

எதைப் பற்றி வேண்டுமானாலும் கேளுங்கள் சொல்கிறேன்!.. ஆனால் இதை மட்டும் நான் சொல்ல மாட்டேன்!. ரஜினி கூறிய பதில்?..

 

கவர்னரை சந்திக்க அவசர அவசரமாக சென்றார் நடிகர் ரஜினிகாந்த்.கவர்னர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை நேரில் சந்தித்தார்.சென்னை கிண்டியிலுள்ள கவர்னர் மாளிகையில் நடிகர் ரஜினி சந்தித்துப் பேசியுள்ளார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கவர்னர் அலுவலகம் தரப்பில் கூறப்பட்டது. இது குறித்து நிருபர்களூக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது, கவர்னருடனா சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு. தமிழ்நாட்டிற்கு நல்லது செய்ய எதுவேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளேன் என கவர்னர் ரவி கூறினார். காஷ்மீரில் பிறந்து அதிக காலம் வட இந்தியாவில் வளர்ந்தவர் கவர்னர் ரவி. தற்போது தமிழகத்தில் இருக்கும் ஆன்மிக உணர்வு அவரை வெகுவாகக் கவர்ந்துள்ளது. தமிழர்களின் கடின உழைப்பு மற்றும் நேர்மை போன்றவை மிகவும் பிடித்திருப்பதாக அவர் கூறினார்.

கவர்னருடன் 30 நிமிடங்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். அவருடன் அரசியல் குறித்தும் சிலவற்றை விவாதித்து பேசியிருந்தோம்.ஆனால் அதை மட்டும் உங்களிடம் என்னால் தற்போது சொல்ல முடியாது என்றார். மீண்டும் அரசியலுக்கு வரப்போகிறீர்களா? என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, மீண்டும் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று நடிகர் ரஜினி பதிலளித்தார். நாடாளுமன்ற தேர்தல் பற்றி விவாதித்தீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது பற்றி சொல்ல முடியாது என்று ரஜினி பதிலளித்தார். முடிவில் ஜெயிலர் படப்பிடிப்பு ஆகஸ்ட் 15 அல்லது 25ஆம் தேதி தொடங்கும் என்று கூறினார். இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். இந்த திடீர் சந்திப்பில் இணையதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

மேலும் மக்கள் மத்தியில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் ஆசைப்படுகிறார்களாம். இந்நிலையில் ரஜினிகாந்த் க்கு இதைப் பற்றி கொஞ்சம் கூட யோசனை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.