இன்று இந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும் நாள்!

0
216

மேஷம்

இன்று தங்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும் நாள், பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சனைகளும் நீங்கும். சேமிப்பு அதிகரித்தாலும் சிக்கனத்தை கையாள்வதில் கவனமாக இருப்பீர்கள், தொழில் ரீதியாக பயணங்கள் செய்ய நேரலாம்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுபவரின் எண்ணிக்கை அதிகரிக்கும் நாள், சுணக்கத்துடன் இருந்த காரியம் ஒன்று சுறுசுறுப்பாக நடைபெறும், பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடிவடையும், உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.

மிதுனம்

இன்று தாங்கள் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள், எதிர்பார்த்த காரியங்கள் எதிர்பார்த்தபடியே நடைபெறும், சுபச்செய்திகள் வந்து சேரும். தொழில் நலன் கருதி முக்கிய புள்ளிகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

கடகம்

இன்று தாங்கள் வீடு மாற்றம் தொடர்பாக சிந்திப்பீர்கள், உடன்பிறப்புகள் வழியில் உண்டான உபத்திரவங்கள் நீங்கும், மங்கல செய்தியொன்று இல்லம் தேடி வரலாம், உத்தியோக உயர்வு தொடர்பான தகவல் கிடைக்கும்.

சிம்மம்

இன்று தாங்கள் பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும், கூட்டாளிகளிடம் கவனமாக நடந்து கொள்வது நன்று உணர்ச்சிவசப்படுவதன் மூலமாக சில காரியங்களில் தாமதம் உண்டாகும்.

கன்னி

இன்று தாங்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள், எதையும் திட்டமிட்டு செய்ய முடியாது. உத்யோகத்தில் மேலதிகாரிகள் வேலையை முடிக்கச் சொல்லி நெருக்கடி வழங்குவார்கள்.

துலாம்

இன்று தங்களுக்கு எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும் நாள், மற்றவருக்கு பொறுப்புச் சொல்லி வாங்கி கொடுத்த பகை வந்து சேரலாம். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பார்கள், வழிபாடுகளில் அதீத நம்பிக்கை உண்டாகும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும் நாள், வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். நேற்று நடைபெறாத காரியம் இன்று நடந்தேறும், தொலைபேசி வழி தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

தனுசு

இன்று தங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் நாள், தொழிலில் புதிய மாற்றங்களை செய்யும் எண்ணம் தோன்றும், வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள், உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.

மகரம்

இன்று தங்களுக்கு முயற்சிகளில் உண்டான தடுமாற்றம் நீங்கும் நாள், வெளியூர் பயணங்கள் செல்ல வகுத்த திடடம் நிறைவேறும். பிரபலமானவர்களின் சந்திப்பால் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வீர்கள்.

கும்பம்

இன்று தங்களுக்கு நம்பிக்கைகள் யாவும் நடைபெறும் நாள் நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொது வாழ்வில் உண்டான வீணான பழிகள் நீங்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரலாம்.

மீனம்

இன்று தாங்கள் முன்னேற்றம் காணும் நாள், அலுவலகப் பணிகளில் உண்டான தாமதங்கள் நீங்கும் வாரிசுகளின் பழக்க வழக்கங்களை நெறிப்படுத்துவீர்கள், நீண்ட நாளைய நண்பர் ஒருவரின் சந்திப்பு கிடைக்கும்.

Previous articleபார்த்தாவே நாக்கில் எச்சி ஊரும்!.. மலபார் சிக்கன் ரோஸ்ட் ரெசிபி!.. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க…
Next articleஆச்சரியமூட்டும் அதிசயமான அம்மன் கோவில்கள்!