ஆச்சரியமூட்டும் அதிசயமான அம்மன் கோவில்கள்!

0
190

நாடு முழுவதும் பல சிறப்புகள் மிக்க ஏராளமான அம்மன் கோவில்களிருக்கின்றன. அதில் ஆச்சரியமூட்டும் 3 அம்மன் கோவில்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

லால்குடி சப்த ரிஷிஸ்வரர் கோவிலின் அம்பிகை, ஸ்ரீ ப்ரவிருத்தஸ்ரீமதி என்றழைக்கப்படுகிறார். இவர் லட்சுமிக்கே லட்சுமி கடாட்சம் கொடுத்த அம்பாள் என்று சொல்லப்படுகிறது.

சுவாமி கிழக்கு நோக்கி தரிசனம் கொடுக்கிறார் அம்பாள் மேற்கு நோக்கியவாறு மாலை மாற்றும் வடிவில் அருள்பாலித்து வருகிறார். நித்திய கல்யாணியாக மடிசார் புடவையுடன் எப்போதும் காட்சி கொடுக்கும் அம்பாள் தன்னுடைய காதுகளில் ஸ்ரீ சக்கர தாடங்கம் அணிந்திருக்கிறார்.

கோயமுத்தூர் மாவட்டம் குழுமம் என்ற தளத்தில் மாரியம்மன் ஆலயமிருக்கிறது. இந்த ஆலயத்திலிருக்கின்ற மாரியம்மன் லிங்க வடிவிலிருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

லிங்கத்தின் கீழ் ஆவுடையாரும் இருக்கிறது, இந்த மூலவரை பார்க்கும் போது அம்மனுக்குரிய எந்தவித அம்சமும் தென்படாது, ஆனாலும் கூட இந்த லிங்கத்தை அம்மனாக பாவித்து புடவை அணிவித்து பூஜை செய்து வழிபட்டு வருகிறார்கள்.

பட்டீஸ்வரம் மக்களால் சின்ன கோவில் என்றழைக்கப்படும் சக்தி முற்றம் பிரமாண்ட 5 நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு முகமாய் காட்சி தருகிறது. இந்த கோவிலில் மூலவர் சிவக்கொழுந்தீஸ்வரர் கிழக்கு முகமாக காட்சி தருகிறார்.

இவருக்கு சக்தி கணேஸ்வரர் என்ற பெயருமுண்டு இவரை வணங்கி சண்டிகேஸ்வரரை வழிபட்டு வரும்போது சாமி சன்னதிக்கு இடது புறம் சக்தி தழுவிய நாதரின் திருமேனியும் அதன் பின்புறம் ஒற்றை காலில் நின்று தவம் செய்யும் அம்மன் திருமேனியும் நம்மை பரவசப்படுத்துகின்றன.

அம்பாள் ஒற்றை காலை தரையில் ஊன்றி கொண்டு மற்றொரு காலை ஆவுடையாரின் மீது மடக்கி வைத்து தன்னுடைய இரு கரங்களாலும் சிவலிங்கத்தை தழுவி நிற்கும் இந்த திருக்கோலம் வேறெந்த கோவில்களிலும் காண முடியாத சிறப்பாகும். இந்த தலத்தை வழிபடுவோருக்கு திருமணம் கைகூடும் என்கிறார்கள்.