24-8-2022- இன்றைய ராசி பலன்கள்!

0
164

மேஷம்

இன்று தங்களுக்கு மனதில் நினைத்ததை உடனடியாக செய்து முடிக்கும் நாள். உத்தியோகம் மாற்றம் தொடர்பாக சிந்திப்பீர்கள். உடன் இருப்பவர்களால் செலவுகள் ஏற்படும், வரவு திருப்திகரமாக இருக்கும், உடல் நலனில் அக்கறை காட்டுவது நன்று.

ரிஷபம்

இன்று தங்களுக்கு அறிவு நுட்பம் காரணமாக, மகத்தான காரியமொன்றை செய்து முடிக்கும் நாள். தொலைபேசி வழியே கிடைக்கும் செய்திகளால் உற்சாகம் தொற்றிக் கொள்ளும், வாரிசுகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

மிதுனம்

இன்று தங்களுக்கு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். ஆற்றல் மிக்கவர்களின் ஆலோசனைகள் கைகொடுக்கும், கௌரவ பொறுப்புகள் தேடி வரலாம், சமூக நலப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

கடகம்
இன்று தங்களுக்கு முன்னேற்ற பாதையிலிருந்த தடைகள் நீங்கும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்ட முன்வருவார்கள், பாகப்பிரிவினை சுமூகமாக முடிவடையும், அரசு வழியில் சலுகைகள் வந்து சேரும்.

சிம்மம்

இன்று தங்களுக்கு பண வரவு தாராளமாக இருக்கும் நாள் தன்னம்பிக்கையுடன் பணியாற்றுவீர்கள் தலைமை பதில்கள் தங்களை தேடி வரலாம் பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சனைகள் முடிவுக்கு வரும் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

கன்னி

இன்று தாங்கள் நடப்பதெல்லாம் நன்மைக்கே என நினைக்க வேண்டிய நாள். திடீர் மாற்றங்கள் செய்ய நேரலாம். பழகிய சிலரின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நடக்கும் சூழ்நிலை ஏற்படும்.

துலாம்

இன்று தங்களுக்கு திடீரென செலவுகள் உண்டாகி பதட்டமடைய வைக்கும் நாள், காரியம் நிறைவேற அலைச்சல்களை சந்திக்க நேரலாம், உத்தியோகத்தில் உடன் பணியாற்றுபவர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு மதியத்திற்கு மேல் மகிழ்ச்சியான தகவல் கிடைக்கும் நாள். நம்பிக்கைகள் எல்லாம் நடைபெறும், நிதிநிலை அதிகரிக்கும், எடுத்த காரியத்தில் எளிதில் முடித்து வெற்றியடைவீர்கள் தொழில் வளர்ச்சி ஏற்படும்.

தனுசு

இன்று தங்கள் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள், வீட்டுச் செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகளின் கோபத்திற்கு அழகாமல் பார்த்துக் கொள்வது நன்று, வீடுமாற்றம் தொடர்பாக சிந்திப்பீர்கள்.

மகரம்

இன்று தாங்கள் ஆரம்பித்த காரியங்கள் துரிதமாக நடைபெறும் நாள். குடும்பப் பிரச்சினைகளுக்குரிய புதிய தீர்வு கிடைக்கும், கட்டிடம் கட்டி குடியேறும் எண்ணம் நிறைவேறும் கடமையிலிருந்த தொய்வு நிலை மாறும்.

கும்பம்

இன்று தாங்கள் வளர்ச்சி பாதையில் அடி எடுத்து வைக்கும் நாள். உற்றார், உறவினர்கள், தங்களுடைய வளர்ச்சியை கண்டு ஆச்சரியப்படுவார்கள், உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

மீனம்

இன்று தங்களுக்கு நினைத்தது நிறைவேறி நிம்மதி காணும் நாள். விரும்பிய பொருளொன்றை அதிக விலை கொடுத்து வாங்குவீர்கள், பயணங்கள் அனுபவம் கொடுப்பதாக இருக்கும், வழிபாடுகளில் அதிக நம்பிக்கை ஏற்படும்.

Previous articleஆஹா என்ன ஒரு சுவை!.. பார்த்தாலே சாப்பிட தூண்டும் காளான் பிரியாணி!..
Next articleசிவனின் அடியும் முடியும் புதைந்ததன் ரகசியம் தெரியுமா?