1-9-2022- இன்றைய ராசி பலன்கள்

0
176

மேஷம்

இன்று தங்களுக்கு வரன்கள் வாயில் தேடி வரும் நாள் இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும், மற்றவர் நலனில் அக்கறை கொண்டு எடுத்த முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும் தொழில் முன்னேற்றம் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு கிடைத்த நண்பர்களால் வளர்ச்சி அதிகரிக்கும் நாள் உற்றார் உறவினர்களின் வருகை காரணமாக, செலவுகள் அதிகரிக்கலாம் விட்டுப் போன வரன்கள் மீண்டும் வந்து சேரும் பயணத்தால் பலன் கிடைக்கும்.

மிதுனம்

இன்று தங்கள் இடமாற்றம் தொடர்பாக சிந்திக்கும் நாள் எதிர்பாராத விதத்தில் சில சம்பவங்கள் நடக்கும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பார்கள் வீடு வாகன பராமரிப்பதற்காக ஒரு தொகையை செலவிட நேரிடலாம்.

கடகம்

இன்று தாங்கள் வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். நாளைய பிரச்சனை என்று இன்று நல்லதொரு முடிவுக்கு வரும், வீட்டு உபயோக பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள் வரவு திருப்திகரமாக இருக்கும்.

சிம்மம்

இன்று தங்கள் வாக்கு சாதுரியம் காரணமாக வளம் காணும் நாள் வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் பொருளாதார நிலையை அதிகரித்துக் கொள்ள முன் வருவீர்கள், ஆரோக்கியம் தொடர்பாக ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் நீங்கும்.

கன்னி

இன்று தங்களுடைய இல்லத்தில் மங்கள ஓசை கேட்கும் நாள் புதிய நண்பர்கள் அறிமுகம் கிடைக்கும் ஒரே சமயத்தில் பல வேலைகள் வந்தும் செய்து முடிப்பீர்கள், திட்டமிட்ட பயணங்களை மாற்றியமைக்கும் சூழ்நிலை ஏற்படும்.

துலாம்

இன்று தங்களுக்கு உடன்பிறப்புகளால் கடன் சுமை குறையும் நாள் நீங்கள் எதிர்பாராத விதத்தில் ஒருவர் உங்களை தேடி வருவார், திடீர் பயணங்கள் ஏற்படும் தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வது தொடர்பாக சந்திப்பீர்கள்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு வெற்றி செய்தி வீடு தேடி வரும் நாள் பயணத்தால் பாலிய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். வங்கிகளில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

தனுசு

இன்று தங்களுக்கு தொழிலில் உண்டான தொல்லை நீங்கும் நாள் காரிய வெற்றிக்கு உடன் இருப்பவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வீடு மனை வாங்கும் முயற்சியில் ஆர்வம் அதிகரிக்கும் தொழில் நலன் கருதி முக்கிய முடிவுகளை மேற்கொள்வீர்கள்.

மகரம்

இன்று தங்களுக்கு அருகில் இருப்பவர்கள் பக்கபலமாக இருக்கும் நான் வேலை பளு அதிகரிக்கும், பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் நந்தினி வாருங்கள் அரைகுறையாக நின்ற பணிகள் இன்று முடிவடையும்.

கும்பம்

இன்று தங்களுக்கு ஆதாயத்தை விடவும் செலவுகள் அதிகரிக்கும் நாள். நிதானத்துடன் செயல்படுவதன் மூலமாக நிம்மதி காண இயலும். உத்தியோகத்தில் பணப்பொறுப்பில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்படுவது நன்று.

மீனம்

இன்று தங்களுக்கு பண நெருக்கடி உண்டாகும் நாள் அருகில் இருப்பவர்களால் சிக்கல்கள் ஏற்படும், உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடலாம். விலகிச் சென்ற உறவினர்களால் தொந்தரவு உண்டாகும்.

Previous articleஆஹா இப்படி ஒரு சுவையான பால் அல்வாவா! ஒருமுறை நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்!
Next articleவிநாயகரை நீரில் கரைப்பதற்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியுமா?