ஆஹா இப்படி ஒரு சுவையான பால் அல்வாவா! ஒருமுறை நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்!

0
245

ஆஹா இப்படி ஒரு சுவையான பால் அல்வாவா! ஒருமுறை நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்!

தேவையான பொருட்கள் :முதலில் பால் இரண்டு கப் , சர்க்கரை இரண்டு கப், முந்திரி ஆறு, ஏலக்காய் இரண்டு, நெய் தேவையான அளவு.

செய்முறை : முதலில் முந்திரியை உடைத்து வைத்து கொள்ள வேண்டும். ஏலக்காய் நாம் சாப்பிடும் பொழுது தட்டுப்படாமல் இருப்பதற்கு சர்க்கரையை ஏலக்காய் விதையுடன் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு சுண்ட காயும் வரை கிளற வேண்டும்.

இதனையடுத்து சிறிய பேனில் நெய் ஊற்றி முந்திரியை பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.பால் ஓரளவு திரண்டதும் சர்க்கரை மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை சேர்த்து சுண்ட காய்ச்சிய பிறகு

பாலானது கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது அடுப்பை அணைத்து நன்கு கிளறி விடும் பொழுது மேலும் கெட்டியான பதத்திற்கு வரும். அவை மிகவும் சுவையான பால் அல்வாவாக ரெடி ஆகிவிடும்.

 

Previous articleவியாழக்கிழமைகளில் மௌனவிரதம் இருப்பது ஏன்? ஸ்ரீதட்சணாமூர்த்திக்கு உகந்த நாள்!
Next article1-9-2022- இன்றைய ராசி பலன்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here