இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சுபகாரிய பேச்சுகள் முடிவாகும்!

0
62

மேஷம்

இன்று தங்களுடைய தேவைகள் யாவும் பூர்த்தியாகும் நாள். தொழிலில் போட்டியாக இருந்தவர்கள் இனி ஒத்து வருவர். கடன் சுமை குறைய சில ஏற்பாடுகளை செய்வீர்கள். பயணங்களால் உடல் நலன் பாதிக்கப்படலாம்.

ரிஷபம்

இன்று தாங்கள் சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். பிற்பகலில் வெற்றி செய்திகள் தேடி வரும், யாரை சந்திக்க வேண்டும் என நினைத்தீர்களோ அவர்களே இல்லம் தேடி வருகை தருவார்கள். உத்தியோகம் மாற்றம் உறுதியாகும்.

மிதுனம்

இன்று தாங்கள் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். தொழிலுக்காக எடுத்த முயற்சி தொல்லையில் போய் முடியும். எதையும், யாரிடமும், நாசுக்காக சொல்வது நன்று. உறுதியான முடிவை மேற்கொள்ள முடியாமல் திணறுவீர்கள்.

கடகம்

இன்று தங்களுக்கு வெற்றி செய்திகள் வீடு தேடி வரும் நாள். மாற்றினத்தவர்களின் உதவியால் தொழில் முன்னேற்றத்தை காண்பீர்கள். பொல்லாதவர்கள் தங்களை வைத்து விலகிச் செல்வார்கள், பண தேவைகள் பூர்த்தியாகும்.

சிம்மம்

இன்று தங்களுக்கு இயல்பான வாழ்க்கையில் இன்பங்கள் அதிகரிக்கும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்லதொரு முடிவிற்கு வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டு மகிழ்ச்சியடைவீர்கள். அரசியல் செல்வாக்கு அதிகரிக்கும்.

கன்னி

இன்று தங்களுக்கு வெளிவட்டார பழக்க வழக்கத்தால் விருப்பங்கள் நிறைவேறும் நாள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் அதீத ஆர்வம் காட்டுவீர்கள்.

துலாம்

இன்று தங்களுக்கு துன்பங்கள் யாவும் விலகிச் செல்லும் நாள். நல்ல செய்திகள் உங்கள் இல்லம் தேடி வரும். திடீர் பயணங்களால் திசை மாற்றம் உண்டாக்கலாம், வங்கிகளில் வைப்பு நிதி அதிகரிக்கும், அரசு வழியில் அனுகூலம் தரும் செய்தி கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று தாங்கள் சந்தித்த நண்பர்களால் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். தொலைதூரத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும், மற்றவர்கள் உங்களிடம் கொடுத்த பொறுப்புகளை முடித்துக் கொடுத்து பாராட்டுப் பெறுவீர்கள்.

தனுசு

இன்று தாங்கள் அரசியல்வாதிகளின் சந்திப்பால் அனுகூலம் காணும் நாள். அழகிய நண்பர்களால் பாராட்டுக்கரை பெறுவீர்கள், முடங்கி கிடந்த தொழிலில் முன்னேற்றம் உண்டாகும், விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவார்கள்.

மகரம்

இன்று தாங்கள் வியக்கும் வகையிலான செய்தி வீடு தேடி வரும் நாள். கனிவான பேச்சுக்களால் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். பழுதான வீடுகளை பராமரிக்கும் எண்ணம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சிறு இடர்பாடுகள் வந்து நீங்கும்.

கும்பம்

இன்று தங்களுடைய எண்ணங்கள் யாவும் நிறைவேறி இன்பம் காணும் நாள் யாரிடமும் பகை பாராட்டாமல் பக்குவமாக நடந்து கொள்வது நன்று. தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள், சிக்கலிலிருந்து விடுபடுவீர்கள்.

மீனம்

இன்று தங்களுக்கு வரவு திருப்திகரமாக இருக்கும் நாள். நல்லவர்களில் சந்திப்பு கிடைக்கும், சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவாகி மனநிம்மதியை கொடுக்கும். எந்த காரியத்தையும், எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள்.