சுவையான பாசிப் பருப்பு கொழுக்கட்டை! ஒருமுறை சுவைத்து பாருங்கள்!

0
241

சுவையான பாசிப் பருப்பு கொழுக்கட்டை! ஒருமுறை சுவைத்து பாருங்கள்!

தேவையான பொருட்கள் :பாசிப் பருப்பு கால் கிலோ, புழுங்கல் அரிசி 200 கிராம், வெல்லம் அரை கப் ,தேங்காய் துருவல் கால் கப் ,முந்திரி மூன்று , பொடி செய்த ஏலக்காய் , நெய் ஒரு டேபிள் ஸ்பூன்.

செய்முறை :முதலில் புழுங்கல் அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பாசிப் பருப்பை நெய் விட்டு பொன்னிறமாக வறுத்து ரவை போல பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.வெல்லத்தை சூடான தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்பு வாணலியில் வெல்லக்கரைசல், பொடியாக்கிய பாசிப் பருப்பு, அரைத்த அரிசி மாவு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த் தூள், முந்திரி பருப்பு ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அதை எண்ணெய் தடவிய இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும். சூடான சுவையான கொழுக்கட்டை ரெடி ஆகிவிடும்.

 

Previous articleஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று சுபகாரிய பேச்சுகள் முடிவாகும்!
Next articleஅஷ்டமி நவமி திதியில் நற்காரியங்களை தவிர்ப்பதன் காரணம் என்ன?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here