9-9-2022- இன்றைய ராசி பலன்கள்!

0
217

மேஷம்

இன்று தங்களுக்கு நிலவு வழிபாட்டால் நிம்மதி அதிகரிக்கும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளால் நன்மை உண்டாகும். பொல்லாதவர்கள் தங்களை விட்டு விலகிச் செல்வார்கள்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு பௌர்ணமி வழிபாட்டால் பலன் கிடைக்கும் நாள். ஆரோக்கியம் சீராகும். மற்றவர்கள் நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியான பயணத்தை மேற்கொள்வீர்கள்.

மிதுனம்

இன்று தாங்கள் இடமாற்றத்தால் இனிமை காண வேண்டிய நாள். பொதுவாழ்வில் புகழ் அதிகரிக்கும். வழக்குகள் சாதகமாக முடிவடையும். உத்தியோகத்தில் தங்களுடைய கருத்துக்களை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வார்கள்.

கடகம்

இன்று தாங்கள் வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். தொழில் முயற்சியில் சில குறுக்கீடுகள் வரலாம். கடன் சுமை அதிகரிக்கலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் தங்களுடைய திறமைக்கு மதிப்பு கொடுக்க மாட்டார்கள்.

சிம்மம்

இன்று தங்களுக்கு தித்திக்கும் செய்தி வந்து சேரும் நாள். திறமை மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் தொடர்பான தகவல் வரலாம்.

கன்னி

இன்று தங்களுக்கு தடைகள் நீங்கி பணவரவு அதிகரிக்கும் நாள். தொழில் வளர்ச்சிக்கு தூண்டுகோளாக இருந்தவர்களை சந்திப்பீர்கள். இரவு பகல் பாராமல் பாடுபட்டதற்கு ஏற்ற பலன் கிடைக்கும். தந்தை வழி உறவில் நெருக்கம் உண்டாகும்.

துலாம்

இன்று தங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். தங்களுடைய யோசனைகளை கேட்டு நடந்தவர் தங்களை பாராட்டுவார்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று தாங்கள் மகத்துவம் காண மலை வலம் வர வேண்டிய நாள். நல்லவர்களின் சந்திப்பு கிடைக்கும். சுப காரிய பேச்சுக்கள் முடிவிற்கு வரும். செல்வந்தர்களின் ஒத்துழைப்பால் சில காரியங்கள் முடிவடையும்.

தனுசு

இன்று தாங்கள் தாராளமாக செலவு செய்து மகிழ்ச்சியடையும் நாள். வியாபார விருத்தி ஏற்படும். நீடித்து வந்த நோய் நீங்கும். மறதியால் விட்டுப் போன பணிகளை மீண்டும் செய்வீர்கள். உத்தியோகத்தில் பணியாளர்களிடம் பக்குவமாக நடந்து கொள்வது நன்று.

மகரம்

இன்று தங்களுக்கு தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் நாள். காணாமல் போன பொருள் மீண்டும் கைக்கு கிடைக்கும். திருமண முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். உடன்பிறப்புகளால் செலவுகள் ஏற்படும்.

கும்பம்

இன்று தாங்கள் ஆலய வழிபாட்டால் அமைதி காண வேண்டிய நாள். ஆதரவு கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நட்பு வட்டாரம் விரிவடையும். வீடு கட்டி குடியேறும் எண்ணம் அதிகரிக்கும்.

மீனம்

இன்று தங்களுக்கு நன்மைகள் யாவும் நடைபெறும் நாள். தாங்கள் சந்தித்த நண்பர்களால் மகிழ்ச்சியான தகவல் கிடைக்கும். உடன்பிறப்புகளிடையே இருந்த விரோதம் நீங்கும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

Previous articleபச்சரிசி கார கொழுக்கட்டை! இதையும் சுவைத்து பாருங்கள்! 
Next articleவித்தியாசமான விநாயகர் சிலைகள் இருக்கின்ற ஆலயங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here