பச்சரிசி கார கொழுக்கட்டை! இதையும் சுவைத்து பாருங்கள்! 

0
230

பச்சரிசி கார கொழுக்கட்டை! இதையும் சுவைத்து பாருங்கள்!

தேவையான பொருட்கள் :பச்சரிசி மாவு மூன்று கப், உப்பு தேவையான அளவு,தேங்காய் துருவல் அரை கப், பச்சமிளகாய் இரண்டு, எண்ணெய் தேவையான அளவு, கடுகுஅரை டீஸ்பூன் ,உளுத்தம் பருப்புகால் டீஸ்பூன், மிளகாய் வற்றல் ஒன்று, கறிவேப்பிலை ஒரு கொத்து , பெருங்காயத் தூள் இரண்டு சிட்டிகை.

செய்முறை :  முதலில்  ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பெருங்காயத்தூள், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

அதன் பிறகு அதில் உப்பு, தேங்காய் துருவல், தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்தவுடன் மாவை சிறிது சிறிதாக சேர்க்க வேண்டும்.

பிறகு மீதமான தீயில் வைத்து அடிபிடிக்காமல் கிளறவும். மாவு கெட்டியாகும் போது அடுப்பை அணைத்து சிறிது நேரம் ஆற விட வேண்டும்.பின் சிறிய உருண்டைகளாக பிடித்து இட்லி குக்கரில் வைத்து ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும். இப்போது சுவையான பச்சரிசி கார கொழுக்கட்டை தயாராகி விடும்.

 

Previous article2 மாதங்களுக்கு இந்த மாவட்டத்தில் 144 தடை உத்தரவு – வெளியான திடீர் அறிவிப்பு
Next article9-9-2022- இன்றைய ராசி பலன்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here