இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பணம் தேவை பூர்த்தியாகும்!

0
144

மேஷம்

இன்று தாங்கள் பக்குவமாக பேசி பாராட்டுக்க ளை பெறும் நாள். வியாபாரத்தை புது ஒப்பந்தங்களால் லாபம் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். முயற்சிகளில் உண்டான தடைகள் நீங்கும்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு இனிமையான நாள். குடும்பத்தைச் சார்ந்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பிரபலஸ்தர்களின் சந்திப்பால் பெருமை கிடைக்கும். உறவினர்களின் வருகையால் உள்ளம் மகிழ்வீர்கள். உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும்.

மிதுனம்

இன்று தங்களுக்கு புதிய பாதை புலப்படும் நாள். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்ச்சியடைவீர்கள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. தொழிலில் ஏட்டிக்கு போட்டியாக இருந்தவர்கள் இனி புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள்.

கடகம்

இன்று தாங்கள் எதிலும் யோசித்து செயல்பட வேண்டிய நாள். எதையும் திட்டமிட்டு செய்ய முடியாது. ஆரோக்கிய தொல்லையால் அவதிகள் உண்டாக்கலாம். பொது வாழ்வில் வீண் பழிகள் ஏற்படலாம். பயணங்களை மாற்றியமைப்பீர்கள்.

சிம்மம்

இன்று தங்களுக்கு வசதி வாய்ப்புகள் இருக்கும் நாள் எதிர்காலத்தை மனதில் வைத்து சிந்திப்பீர்கள். வெளிநாட்டு பயணம் வாய்ப்புகள் கை கூடுவதற்கான அறிகுறிகள் தோன்றலாம். உத்தியோகம் தொடர்பாக எடுத்த புது முயற்சி வெற்றி பெறும்.

கன்னி

இன்று தாங்கள் சொல்லை செயலாக்கி காட்டும் நாள். மன குழப்பம் நீங்கும். குடியிருக்கும் வீட்டாரோடு உண்டான பகை அகலும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தொழிலுக்காக முடிவெடுப்பதில் தயக்கம் காட்ட வேண்டாம்.

துலாம்

என்று தாங்கள் இனிய பேச்சால் எதிரிகளை வெற்றி பெறும் நாள். உழைப்புக் கேற்ற பலன் கிடைக்கும். உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள். தொழிலில் மேன்மை உண்டாகும். நேற்று சந்திக்க நினைத்த ஒருவர் இன்று நேரில் வருகை தருவார்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு நற்காரியங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். ஆற்றல் மிக்கவர்கள் தங்களுடன் ஒன்றிணைந்து கொள்வார்கள் முன்னேற்றத்திலேயே கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் உண்டான சச்சரவு நீங்கும்.

தனுசு

இன்று தங்களுக்கு தொலைபேசி மூலமாக பொன்னான தகவல் வந்து சேரும் நாள். வருமானம் வரும் வழியை கண்டு கொள்வீர்கள். நண்பர்கள் சொல்லும் யோசனை கை கொடுக்கும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும்.

மகரம்

இன்று தங்களுக்கு நம்பிக்கைகள் யாவும் நடைபெறும் நாள். தொழிலில் எதிர்ப்பாக இருந்த நண்பர்கள் இணக்கத்துடன் செயல்படுவார்கள். பணம் தேவைகள் பூர்த்தியாகவும். மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறலாம்.

கும்பம்

இன்று தங்களுக்கு பிரச்சினைகள் யாவும் முடிவுக்கு வரும் நாள். மாற்றினத்தவரால் பெருமை வந்து சேரும். யாரைப் பார்க்க நினைத்தீர்களோ அவர்களை சந்தித்து மகிழ்ச்சியடைவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் தங்களுடைய குரலுக்கு செவி சாய்ப்பர்.

மீனம்

இன்று தங்களுக்கு பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சுணக்கத்துடன் இருந்த காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். எதிர்பார்த்த தகவல் தொலைபேசி மூலமாக வந்து சேரும்.

Previous articleவிடுதலைப் போராட்ட வீரர்கள் சர்தார் ஆதிகேசவ நாயகர் மற்றும் செவாலியே செல்லான் நாயகர் அவர்களின் பிறந்த தினம்
Next articleதினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு பயன்கள் கிடைக்குமா!