தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு பயன்கள் கிடைக்குமா!

0
114

தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு பயன்கள் கிடைக்குமா!

அனைத்து தரப்பு மக்களும் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் ஓர் பழம் தான் வாழைப்பழம்.நாம் பெரும்பாலும் அறிந்தது வாழைப்பழம் சாப்பிடுவது உணவு செரிமானத்தை சுலபமாக்கும் என்பதே. ஆனால் வாழைப்பழத்தில் இது மட்டுமல்லாமல் ஏராளமான பயன்கள் உள்ளன.பல்வேறு வகையான வாழைப்பழம் இருந்தாலும் குறிப்பாக செவ்வாழையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது.

குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. பீட்டா-கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் மற்றும் நமது உடலை இதய நோய், புற்றுநோயின் தாக்குதல்களிலிருந்து நமக்கு பாதுகாப்பளிக்கும்.

பீட்டா-கரோட்டீன் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது என உடல்நல நிபுணர்களும்,மருத்துவர்களும் கூறுகின்றனர். அதற்காக தினமும் அந்த சத்து நிறைந்த உணவுப் பொருளை தவறாமல் உட்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். மேலும் பீட்டா-கரோட்டீன் உடலினுள் செல்லும் போது வைட்டமின் ஏ-வாக மாற்றப்பட்டு, கண்களின் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் இது மேம்படுத்தும் என்று கூறுகின்றனர்.

குறிப்பாக செவ்வாழை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது என்று கூறுகின்றனர். இப்போது செவ்வாழையை ஒருவர் தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் என்னவெல்லாம் நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

சிறுநீரக கற்களைத் தடுக்கும்

செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது சிறுநீரக கற்கள் உருவாவது, இதய நோய் மற்றும் புற்றுநோய் தாக்குதலிலிருந்து தடுக்கும். மேலும் இது உடலில் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரித்து, எலும்புகளின் ஆரோக்கியத்தையும் வலுப்படுத்தும். எனவே உங்களுக்கு சிறுநீரக பிரச்சனைகள் ஏதும் வராமலிருக்க தினமும் ஒரு செவ்வாழையை தொடர்ந்து உட்கொண்டு வாருங்கள்.

எடையைக் குறைத்தல்

பொதுவாக எடையைக் குறைக்க நினைப்போர் கலோரிகள் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை எடுக்கக்கூடாது என்று ஆலோசனை வழங்குவார்கள். அந்த வகையில் செவ்வாழையில் மற்ற வாழைப்பழங்களை விட கலோரிகள் மிகவும் குறைவு. எனவே எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் ஒரு செவ்வாழையை காலையில் உட்கொண்டு வந்தால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்,அதே நேரத்தில் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

இரத்த அளவை அதிகரிக்கும்

நமது உடலில் இரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவு குறிப்பிட்ட அளவிற்கு குறைவாக இருந்தால் உடல் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே உடலில் இரத்தணுக்களின் அளவை சீராக பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. அதற்கு செவ்வாழை சாப்பிடுவது மிகவும் உதவியாக இருக்கும். ஏனெனில் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இரத்தணுக்களின் அளவை தொடர்ந்து சீராகப் பராமரிக்கும்.

உடலின் ஆற்றல் அதிகரிக்கும்

செவ்வாழை உடலுக்கு தேவையான அனைத்து வகையான ஆற்றலை வழங்கி உடலின் சுறுசுறுப்பை அதிகரிக்கும். எப்படியெனில் செவ்வாழையில் உள்ள இயற்கையான சர்க்கரை சத்து ஆற்றலாக மாற்றப்பட்டு, உடலின் சோர்வைத் தடுத்து, உடலை புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ள உதவும். எனவே நீங்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்க விரும்பினால் தினம் ஒரு செவ்வாழையை தொடர்ந்து சாப்பிடுங்கள்.

நெஞ்செரிச்சல்

நெஞ்செரிச்சலால் கஷ்டப்படுபவர்கள் தினமும் செவ்வாழையை உட்கொண்டு வந்தால், இதிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். எப்படியெனில் இதில் இயற்கையாக ஆன்டாசிட் தன்மை உள்ளது. இதனால் இப்பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல் பிரச்சனை குணமாகும்.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது

செவ்வாழையில் உள்ள உணவு நார்ச்சத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு திடீரென உயர்வதைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு செவ்வாழையை தினமும் உட்கொள்வது மிகுந்த பலனை அளிக்கும். ஜிஐ (கிளைசெமிக் இன்டெக்ஸ்) 51 மஞ்சள் வாழைப்பழத்தில் காணப்படுகிறது, அதே சமயம் செவ்வாழையில் ஜிஐ 45 ஆக உள்ளது, எனவே இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. ஒரு ஆய்வில், செவ்வாழையில் குறைந்த கிளைசெமிக் எதிர்வினை நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் என்று தெரிய வந்துள்ளது.

இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது

செவ்வாழையை தொடர்ந்து உட்கொள்வது உங்கள் உடலில் இரத்த அழுத்தம் அதிகரிப்பதைத் தடுக்கிறது மற்றும் அதைக் கட்டுப்படுத்தும் வேலையையும் செய்கிறது. செவ்வாழையில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. அதனால் இது இரத்த அழுத்தத்தை பராமரிப்பதிலும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

இதயம் தொடர்பான நோய்களுக்கு சிறந்தது

நெஞ்செரிச்சல் என்ற புகார் இருந்தாலும், செவ்வாழை பழம் சாப்பிடுவது உங்களுக்கு நன்மை பயக்கும். செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் தொடர்பான நோய்கள் வரும் அபாயம் குறைகிறது.

இரத்த சோகை அபாயம் சரிசெய்யும்

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, உடலில் வைட்டமின் பி6 இல்லாததால், இரத்த சோகை பிரச்சனை ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. மறுபுறம், செவ்வாழையில் அதிக வைட்டமின் பி6 இருப்பதால், அதை தினமும் சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சனையைத் தவிர்க்கலாம். இதனை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம், உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி6 ஆகியவை செவ்வாழையில் ஏராளமாக உள்ளன, எனவே இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து உடலை வலுப்படுத்த உதவுகிறது.