இந்த ராசிக்காரர்கள் இன்று எதிலும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்!

0
187

மேஷம்

இன்றைய தினம் தாங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியுடன் செய்து முடிப்பீர்கள். வாரிசுகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் அகலும்.

ரிஷபம்

இன்றைய தினம் தங்களுடைய வீட்டில் மன மகிழ்ச்சி கொடுக்கும் சம்பவங்கள் நடைபெறும். திருமண சுப முயற்சி அனுகூலமான பலன் கிடைக்கும். அவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பல போட்டிகளுக்கிடையே வெற்றி வந்து சேரும்.

மிதுனம்

இன்றைய தினம் தங்களுக்கு உடல்நலையில் சற்றே சோர்வும், செய்யும் வேலையில் சுறுசுறுப்பின்மையும் காணப்படும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் உண்டாகும். வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலமாக வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

கடகம்

இன்றைய தினம் தங்களுக்கு பணவரவு தாராளமாக காணப்படும். தேவைகள் அனைத்தும் நிறைவேறும். வாரிசுகளால் பெருமை வந்து சேரும். உத்தியோகத்தில் தங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சிலருக்கு புதிய வண்டி, வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும்.

சிம்மம்

இன்றைய தினம் வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகத்தால் பல புதிய அனுபவங்கள் கிடைக்கும். சொத்து தொடர்பான வழக்குகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைப்பளு குறையும். உறவினர்கள் மூலமாக மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும்.

கன்னி

இன்றைய தினம் தங்களுடைய குடும்பத்தில் அமைதி காணப்படும். வாரிசுகளால் உண்டான மன கஷ்டங்கள் குறையும். வேலையில் பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபத்தை காண்பீர்கள். ஆடம்பரப் பொருட்கள் சேர்க்கை உண்டாகும். கடன் குறையும்.

துலாம்

இன்று தாங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதாக கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வருமானம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

இன்றைய தினம் தங்களுக்கு குடும்பத்தில் மனமகிழ்ச்சி கொடுக்கக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். புத்திர வழியில் அனுகூலமான பலன் கிடைக்கும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும் க்கும்.

தனுசு

இன்று தாங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி காணப்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை வழங்கும். வெளிவட்டார நட்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும்.

மகரம்

இன்று தங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக காணப்படும். வாரிசுகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உடன் பணியாற்றுபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

கும்பம்

இன்று தங்களுடைய குடும்பத்தில் சுபச் செலவுகள் ஏற்படும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். சேமிப்பு அதிகரிக்கும்.

மீனம்

இன்று தாங்கள் எந்த செயலை செய்தாலும் சற்றே சிந்தித்து செயல்பட்டால் அது வெற்றி கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை இருக்கும். சிக்கனமாக செயல்படுவதன் மூலமாக கடன்கள் ஓரளவு குறையும். உற்றார், உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும்.

Previous articleஇந்த மூன்று ஸ்டெப்பை மட்டும் செய்தால் போதும்! வீட்டிலேயே பேசியல் ரெடி!
Next articleநெஞ்சு சுருக்கு சுருக்கு என்று குத்துதா? இதை சாப்பிடுங்க! அனுபவ உண்மை!