இந்த மூன்று ஸ்டெப்பை மட்டும் செய்தால் போதும்! வீட்டிலேயே பேசியல் ரெடி!

0
217

இந்த மூன்று ஸ்டெப்பை மட்டும் செய்தால் போதும்! வீட்டிலேயே பேசியல் ரெடி!

 

இந்த மாதத்தில் அதிக அளவு பண்டிகைகள் வருவதால் பெண்கள் அனைவரும் அவரவர்களின் அழகை மேலும் அழகு படுத்த வேண்டும் என பார்லர் செல்வார்கள். வீட்டிலேயே நம் முகத்தை பார்லரில் சென்று செய்யும் பேசியல் போல் செய்து கொள்ளலாம். முதலில் முகத்தை நன்கு கழுவிக்கொள்ள வேண்டும். அதற்காக காய வைக்காத பால் மற்றும் எலுமிச்சை சாறு இரண்டையும் கலந்து கொள்ள வேண்டும். அதை முகத்தில் நன்கு அப்ளை செய்ய வேண்டும். அடுத்ததாக முகத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்ற முதலில் இரண்டு டேபிள்ஸ்பூன் அரிசி மாவு எடுத்துக் கொள்ள வேண்டும் அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து கொள்ள வேண்டும். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து கொள்ள வேண்டும். அதனை முகத்தில் அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.

சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். மூன்றாவதாக ஒரு பாத்திரத்தில் சுடுதண்ணி எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு ரோஸ் வாட்டர் கலந்து ஆவி பிடிக்க வேண்டும். அதன் பிறகு இரண்டு டேபிள் ஸ்பூன் கடலை மாவு, ஒரு டேபிள் ஸ்பூன் தயிர், அரை டேபிள்ஸ்பூன் சந்தனம், சிறிதளவு தக்காளி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பொருட்களை அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு முகத்தில் நன்கு அப்ளை செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு மாதம் இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் முகப்பரு, கருவளையம் ,கரும்புள்ளி போன்றவைகள் இருக்காது.

Previous articleமீண்டும் இணைகிறதா தளபதி வெற்றிக் கூட்டணி…. பொன்னியின் செல்வன் ரிலீஸுக்கு பிறகு பரவும் தகவல்!
Next articleஇந்த ராசிக்காரர்கள் இன்று எதிலும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here