6-10-2022 இன்றைய ராசி பலன்கள்!

0
301

மேஷம்

இன்றைய தினம் தங்களுடைய குடும்பத்தில் மனமகிழ்ச்சி அதிகரிக்கும் சம்பவங்கள் நடைபெறும். வாரிசுகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். உத்யோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகார்களால் மதிக்கப்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் தொழிலில் அணுகூலம் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று தங்களுடைய குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் அகலும். உடல் ஆரோக்கியம் சீராக காணப்படும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலம் கிடைக்கும். நண்பர்கள் மூலமாக உதவிகள் எளிதில் கிடைக்கும்.

மிதுனம்

இன்றைய தினம் தாங்கள் செய்யும் செயல்கள் எல்லாம் வெற்றியை தேடி தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும் சம்பவங்கள் நடக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும். முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

கடகம்

இன்று தங்களுடைய குடும்பத்தில் பணவரவு தாராளமாக காணப்படும். பழைய கடன்கள் முடிவுக்கு வரும். தொழில் தொடர்பாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாரிசுகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். தேவைகளுக்காக அனைத்தும் பூர்த்தியாகும். சேமிப்பு அதிகரிக்கும்.

சிம்மம்

இன்று தங்களுக்கு சுப செலவுகள் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வாரிசுகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக காணப்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

கன்னி

இன்று தங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும். வாரிசுகள் படிப்பில் ஆர்வத்துடன் செயல்படுவார்கள். உடன் பிறந்தவர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுத்த கடன்கள் இன்று வசூல் ஆகும்.சுப காரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.

துலாம்

இன்று தங்களுடைய குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கையில் எடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள். சிறு, சிறு மாறுதல்களை செய்து லாபத்தை காண்பீர்கள். பரிமாற்றம் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு வாரிசுகள் மூலமாக புகழ் வந்து சேரும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். இதுவரையில் இருந்து வந்த கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபார ரீதியான வெளிவட்டார நட்பு கிடைக்கும்.

தனுசு

இன்றைய தினம் தொழில் ரீதியாக பொருளாதார மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராக காணப்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்ங்கள்.

மகரம்

இன்று தங்களுடைய குடும்பத்தில் திடீர் பணவரவு கிடைக்கும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணம் காரணமாக லாபம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

கும்பம்

இன்று தாங்கள் எந்த செயலை செய்தாலும் மன தைரியத்துடன் செய்து முடிப்பீர்கள். தங்களுடைய புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தை சார்ந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சுப காரிய முயற்சிகளில் இருந்து தடைகள் நீங்கும்.

மீனம்

இன்று தாங்கள் சற்று குழப்பமாகவே காணப்படுவீர்கள். எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது மிகவும் நன்று. அடுத்தவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாக செல்வது மிகவும் அவசியம். தொழில் மற்றும் வியாபாரம் முன்னேற்றம் அடையும்.

Previous articleஇந்த பொருட்களை மட்டும் தானம் செய்யக்கூடாது! அதனால் ஏற்படும் விளைவுகள்!
Next articleஉடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! மருள் ஊமத்தை விதை!