இந்த பொருட்களை மட்டும் தானம் செய்யக்கூடாது! அதனால் ஏற்படும் விளைவுகள்!

0
107

இந்த பொருட்களை மட்டும் தானம் செய்யக்கூடாது! அதனால் ஏற்படும் விளைவுகள்!

 

தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என கூறுவார்கள் ஆனால் அன்னதானத்தின் பொழுது நாம் மற்றவர்களுக்கு எந்த விதமான பொருட்களை தர வேண்டும் எதனை தரக்கூடாது எனவும் சில வரைமுறைகள் உள்ளது. பெண்கள் அன்னதானம் செய்தால் குடும்பம் உயரும் என்பது ஐதீகம். பெண்கள் அரிசியை தானமாக கொடுத்தால் அவர்களுக்கு நன்மை உண்டாகும். மேலும் பெண்கள் தானியங்களை தானமாக கொடுக்கலாம்.

நம் வீட்டில் இருந்து ஒரு சில பொருட்களை மட்டும் நாம் அன்னதானமாக கொடுத்தால் அவை நமக்கு கஷ்டத்தை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது. அந்த வகையான பொருட்கள் இருக்கின்றது. முதலாவதாக நம் வீட்டில் ஏற்றப்படும் விளக்கை அடுத்தவர்களுக்கு தானமாக கொடுக்கக் கூடாது. மேலும் அந்த தீபம் திருடு போகக்கூடாது. தானமாகவோ அல்லது திருடு போனாலும் அந்த இடத்தில் உள்ள அதிர்ஷ்டங்கள் நிரந்தரமாக போய்விடும் என்பது ஐதீகம்.

 

பூஜை அறையில் வைத்து பூஜை செய்யப்படும் விளக்கு ,சாமி படங்கள் ,சாமி சிலைகள் போன்றவை தானமாகவோ அல்லது திருட்டுப் போகக்கூடாது. ஒரு பொருளை தானமாக கேட்டு நாம் கொடுக்கும் பொழுது முழு மனதுடன் கொடுக்க வேண்டும். நாம் அணிந்திருக்கும் தங்க ஆபரணங்களை மற்றவர்களுக்கு தானம் கொடுக்கும் பொழுது அவை தங்க தோஷத்தை ஏற்படுத்தும்.

தங்கத்திற்கு அனைத்தையும் ஈர்க்கக்கூடிய சக்தி இருப்பதால் நாம் தானமாக கொடுப்பவர்களின் மனதில் கெட்ட எண்ணங்கள், அவர்களிடம் உள்ள கஷ்டங்கள் போன்றவைகள் நம்மை பாதிக்கும் என கூறப்படுகிறது. வீட்டில் உள்ள கிழிந்த துணிகளை மற்றவர்களுக்கு தானமாக கொடுக்க கூடாது என கூறப்படுகின்றது.

author avatar
Parthipan K