இந்த ராசிக்காரர்களுக்கு இன்று கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்!

0
165

மேஷம்

இன்று தங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். மனதில் புதுவித தெளிவு பிறக்கும். அலுவலகத்தில் அதிக பணிகள் இருப்பதால் தங்களுடைய தனித்திறமை மூலமாக வெற்றி பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி ஏற்படும். தங்களுடைய திறமையின் காரணமாக கூடுதல் ஊக்கத்தொகை கிடைப்பதால் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்துகொள்வீர்கள்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு சீரான நாளாக இருக்கும். விருந்தினரின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். அலுவலகத்தில் தங்களுடைய திறமையின் மூலமாக வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவிக்குள் சந்தோஷம் அதிகரிக்கும். அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு பணவரவு இருக்கும்.

மிதுனம்

இன்று தங்களுக்கு சற்று சீரான நாளாக இருக்கும். வேலைகளை செய்யும் போது கவனமாக செயல்பட வேண்டும். கவனக்குறைவாக இருக்கக் கூடாது. கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள். பணவரவு அதிகமாக காணப்பட்டாலும் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கவலைப்படுவீர்கள்.

கடகம்

இன்று தங்களுக்கு வாலான நாளாக இருக்கும். ஆகவே நீங்கள் செய்யும் பணியை திட்டமிட்டு செய்ய வேண்டும். கவனமாகவும், பொறுமையுடனும் செயல்பட வேண்டிய நாள். மனைவியுடன் பேசும்போது வார்த்தைகளை யோசித்து பேசுவது நல்லது. பணவரவு திருப்திகரமாக இருக்காது.

சிம்மம்

இன்று தங்களுக்கு முக்கிய முடிவுகள் எடுக்க சரியான நாளாக இருக்கும். அலுவலகத்தில் ஆச்சரியமும், உற்சாகமும் காணப்படும். மேலதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். மனைவியிடம் பேசும் போது இனிமையாக பேச வேண்டும். நிதிநிலை தங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

கன்னி

இன்று தங்களுக்கு முக்கிய முடிவுகள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆகவே தங்களுக்கு நன்மை தரக்கூடிய நாளாக இந்த நாள் அமையும். பணியிடத்தில் மும்முரமாக செயல்படுவதால் வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கங்கள் அதிகரிக்கும். நிதிநிலை கணிசமாக இருக்கும்.

துலாம்

இன்று தங்களுக்கு விருப்பமான நாளாக இருக்காது. பணியிடத்தில் தாங்கள் திட்டமிட்டவாறு பணிகள் செய்ய முடியாது. வாழ்க்கைத் துணையிடம் சண்டை போடாமல் இருக்க வேண்டும். பணவரவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள். ஆகவே இறைவனை வழிபட்டால் நன்மை கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு சவாலான நாளாக இருக்கும். ஆகவே இறைவனை வழிபடுங்கள் பணியிடத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படலாம். கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். நிதிநிலை தங்களுக்கு சீராக இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகலாம். ஆகவே கவலைப்படுவீர்கள்.

தனுசு

இன்று தங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் மேற்கொள்வதன் மூலமாக வெற்றி பெறுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். ஆகவே திருப்தி தரக்கூடிய நாளாக இன்றைய நாள் விளங்கும். நிதிநிலை தங்களுக்கு மகிழ்ச்சியை வழங்கும்.

மகரம்

இன்று தங்களுக்கு சீரான நாளாக காணப்படும். தங்களுடைய இலக்கை அடைய நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படலாம். கணவன், மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள். உங்கள் வீட்டு பெரியவர்களுக்கு பணம் செலவு செய்ய நேரலாம். நிதிநிலை நடுநிலையுடன் காணப்படும்.

கும்பம்

இன்று தங்களுக்கு சவாலான நாளாக காணப்படும். ஆகவே நீங்கள் விரும்பும் பலன்கள் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புண்டு. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருப்பதால் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற செலவினங்களை குறைத்துக் கொள்ளலாம்.

மீனம்

இன்று தங்களுக்கு சவாலான நாளாக இருக்கும். மற்றவர்களிடம் அமைதியாக இருப்பதன் மூலமாக நன்மை கிடைக்கும். பணியிடத்தில் கவனமாக செயல்பட வேண்டிய நாள். பணிகளை செய்யும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வாழ்க்கை துணையிடம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். தங்கள் குடும்பத்திற்காக பணம் செலவு செய்ய வேண்டியிருக்கலாம்.

Previous articleகண் குறைபாடு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பாருங்கள்! இரண்டு ஏலக்காய் இருந்தால் மட்டும் போதும்!
Next articleபெண்களே இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்! இந்த நான்கு பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்!