பெண்களே இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்! இந்த நான்கு பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்!

0
268

 

பெண்களே இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்! இந்த நான்கு பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்!

 

பெண்களுக்கு முகத்தில் அதிக அளவு பிரச்சனைகள் ஏற்படுகின்றது. முகப்பரு ,கரும்புள்ளி, கருவளையம் போன்றவைகளை நீக்க பெண்கள் எண்ணற்ற வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நாம் முகத்தில் ஏற்படும் முகப்பரு கரும்புள்ளி போன்றவர்களை நீக்க எளிய வழிமுறையை காணலாம். அதற்கு முதலில் உளுத்தம் பருப்பு எடுத்து அதனை இரண்டு அல்லது நான்கு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதனை மிக்ஸி ஜாரில் போட்டு மாவு பதம் வரும் வரை அரைக்க வேண்டும்.

அந்த மாவானது சிறிதளவு கொரகொரப்பாக இருக்க வேண்டும். அரைத்த உளுந்த மாவில் ஒரு டேபிள் ஸ்பூன் பீட்ரூட் சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும். பீட்ரூட்டை தனியாக சாறு பிழிந்து கொண்டு அதனை சேர்த்துக் கொள்ளலாம் இல்லையெனில் அரைத்து அதில் சேர்த்துக் கொள்ளலாம். பின்பு இரண்டு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அந்த கலவையில் தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உளுந்த மாவு ,பீட்ரூட் சாறு, அரிசி மாவு மற்றும் தயிர்  ஆகிய நான்கு பொருட்களையும் நன்கு கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும் இதனை முகத்தில் மட்டுமில்லாமல் கை கால் உடல் முழுவதும் தடவிக் கொண்டு பத்து அல்லது 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு குளிர்ந்த நீரால் துடைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்துவர முகம் மிருதுவாகவும் சரும பிரச்சனைகள் நீங்கி காணப்படும்.

Previous articleஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்!
Next articleஆகமங்கள் சொல்லும் மாத சிவராத்திரி விரதம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here