மேஷம்
இன்று தாங்கள் சிக்கனமாக செயல்படுவதன் மூலமாக பண பிரச்சினைகளை தீர்க்கலாம். வாரிசுகளின் உடல்நிலை சற்று மந்தமான நிலையில் காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் சற்று காலதாமதம் உண்டாகலாம். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உத்யோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறையும்.
ரிஷபம்
இன்று தாங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கல் லாபகரமாக அமையும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.
மிதுனம்
இன்று தாங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தேடி தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் தங்களுடைய புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். வங்கி சேமிப்பு அதிகரிக்கும்.
கடகம்
இன்று தாங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பு இல்லாமல் செயல்படுவீர்கள். வாரிசுகளின் உடல் ஆரோக்கியத்தில் சற்று மனித நிலை உண்டாகும். தொழில் ரீதியாக சில தடைகள் ஏற்பட்டாலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உடன் பணியாற்றுபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் ஓரளவு குறையும்.
சிம்மம்
இன்று தங்களுடைய வியாபாரம் சிறப்பாக நடைபெறும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை வழங்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். அலுவலகத்தில் உடன் பணியாற்றுபவர்களால் அனுகூலங்கள் ஏற்படும். சுப காரியங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் கிடைக்கும்.
கன்னி
இன்று தங்களுக்கு உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். வெளியூர் பயணங்களில் வீண் பிரச்சனைகள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்துடன் சேர்ந்து மகிழ்வீர்கள். வாரிசுகளால் செலவு உண்டானாலும் சுப செய்தி கிடைக்கும்.
துலாம்
இன்று தங்களுக்கு வாரிசுகளால் மணமகிழ்ச்சி ஏற்படும். சிவகாரியாக முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.
விருச்சிகம்
இன்று தங்களுக்கு வரவை விடவும் செலவுகள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சனைகள் உண்டாகும். உடன் பணியாற்றுபவர்களை அனுசரித்து செல்வதன் மூலமாக தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
தனுசு
இன்று தங்களுடைய குடும்பத்தில் இருப்பவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் இன்று கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டால் லாபம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். பொன் பொருள் சேரும்.
மகரம்
இன்று தங்களுக்கு வியாபாரத்தில் பரிமாற்றம் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் நீங்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சுமூகமாக முடிவடையும். உறவினர்கள் மூலமாக உதவிகள் கிடைக்கும்.
கும்பம்
இன்று தாங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேற உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை. தொழிலில் நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுப காரியங்கள் கைகூடும்.
மீனம்
இன்று தங்களுக்கு பண வரவு தாரளமாக இருக்கும். சுப செலவுகள் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். வாரிசுகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகள் புது பலத்தை வழங்கும். வியாபாரத்தில் சிறு, சிறு மாற்றங்கள் செய்வதன் மூலமாக லாபம் பெறலாம். புதிய பொருளை வாங்குவீர்கள்.