14-10-2022- இன்றைய ராசி பலன்கள்!

0
159

மேஷம்

இன்று தங்களுடைய குடும்பத்தில் இருப்பவர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீரென்று சுபச் செலவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் போட்டி,பொறாமைகள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். பொன் பொருள் சேரும்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு மனதில் குழப்பமும், கவலையும் காணப்படும். தேவையில்லாத பிரச்சினைகள் தங்களை தேடி வரும். எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது சிறப்பு.

மிதுனம்

இன்று தங்களுக்கு திடீர் பணவரவு கிடைக்கும். உடன்பிறப்புகளால் அனுகூலம் ஏற்படும். உத்யோகஸ்தர்களுக்கு வேலையில் சக நண்பர்களின் ஆதரவு உண்டு. கடன் பிரச்சனை தீரும் தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். லாபம் அதிகரிக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்ங்கள்.

கடகம்

இன்று தங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சி வழங்கும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வாரிசுகளின் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும். உறவினர்கள் மூலமாக உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி பெறுவீர்கள்.

சிம்மம்

இன்று தங்களுடைய குடும்பத்தில் தாராள பணவரவு இருக்கும். மனமகிழ்ச்சியும் ஏற்படும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை வழங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

கன்னி

இன்று தங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்கள் மூலமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் அலுவலகத்தில் அதிகாரிகளால் நற்பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று லாபம் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் சற்றே குறையும்.

துலாம்

இன்று நீங்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுப முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். வாரிசுகள் அனுகூலமாக செயல்படுவார்கள்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு காலையிலேயே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். தங்களுடைய பிரச்சனைகள் தீர உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக உதவி புரிவார்கள். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

தனுசு

இன்று தங்களுக்கு உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை அதிகரிக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடன் இருப்பவர்களால் தடைகள் உண்டாகலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். பெரியவர்களின் ஆலோசனைகள் புது நம்பிக்கையை வழங்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

மகரம்

இன்று தங்களுக்கு வியாபாரத்தில் பரிமாற்றம் திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் நீங்கும். குடும்பத்தில் இருந்து பிரச்சனைகள் சுமுகமாக முடிவடையும். உறவினர்கள் மூலமாக உதவிகள் கிடைக்கும்.

கும்பம்

இன்று தங்களுக்கு அதிகாலையிலேயே மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் அணுகூல பலன்கள் கிடைக்கும். மென்பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சியை வழங்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

மீனம்

இன்று தங்களுக்கு நீண்ட நாளாக எதிர்பார்த்து வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வாரிசுகளின் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும். உறவினர்கள் மூலமாக உதவிகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

Previous articleதுணிவு வாரிசு பொங்கலில் மோதப்போவது உறுதி… தமிழ் சினிமா பிரபலம் வெளியிட்ட தகவல்!
Next articleகருகரு கூந்தலுக்கான ரகசியம்! முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் இருக்க வேண்டுமா?