கருகரு கூந்தலுக்கான ரகசியம்! முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் இருக்க வேண்டுமா?

0
149

கருகரு கூந்தலுக்கான ரகசியம்! முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் இருக்க வேண்டுமா?

கூந்தல் நீளமாக இல்லாவிட்டாலும் முடி அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் உள்ள ஆசை. தற்போது உள்ள காற்று மாசுபாடு, தூசி மற்றும் மன அழுத்தம் போன்ற காரணங்களால் முடி கொட்டுவது அதிகமாக உள்ளது. மேலும் கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காததாலும் சிறிய வயதிலேயே இளநரை, முடி கொட்டுதல், சொட்டை விழுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

எளிய முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நமது கூந்தலுக்கான பராமரிப்புகளை செய்யலாம். இதன் மூலம் கூந்தல் கருவறுவென இருப்பதோடு மட்டுமல்லாமல் வளர்ச்சியையும் காணலாம்.

அலோவேரா ஜெல்:

கற்றாழை முகத்திற்கு மட்டுமல்லாமல் கூந்தல் பராமரிப்புக்கு மிகவும் ஏற்றது. கற்றாழை ஒரு சிறந்த இயற்கை கண்டிஷனர். நாம் தலைக்கு குளிப்பதற்கு முன் கற்றாழை ஜெல்லை முடியின் அடி முதல் நுனி வரை தேய்த்து ஒரு இருபது நிமிடங்கள் கழித்து ஷாம்பு கொண்டு கழுவினால் கூந்தல் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

வெந்தயம்:

வெந்தயத்தில் முடி வளர்ச்சிக்கான பல்வேறு நல்ல குணங்கள் உள்ளது. வெந்தயம் உடம்பிற்கு குளிர்ச்சியையும் முடி வளர்ச்சியை தூண்டுவதோடும் கூந்தலுக்கு இயற்கையான போஷாக்கு அளிக்கிறது. வெந்தயத்தை ஊற வைத்து மென்மையாக அரைத்து தலையில் பேக் செய்து அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால் முடி வளர்ச்சியினை கண்கூடாக காணலாம்.

செம்பருத்தி:

செம்பருத்தி இலைகளை அரைத்து தலைக்கு பேக் செய்து 15 நிமிடங்கள் கழித்து அலசினால் கூந்தல் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருப்பதுடன் கூந்தலின் வளர்ச்சி இருக்கும். செம்பருத்தி இலைகள் மட்டுமல்லாமல் பூக்களையும் பயன்படுத்தலாம்.

author avatar
Parthipan K