மேஷம்
இன்று தங்களுக்கு அமைதியாக இருந்து சாதிக்க வேண்டிய நாள். பணிகளையும் செய்யும்போது திட்டமிட்டு கவனமாக செயல்பட வேண்டும். மனைவியிடம் அனுசரித்து செல்ல வேண்டிய நாள். இன்றைய நிதி நிலை நடுநிலையுடன் இருக்கும். செலவுகள் சற்றே அதிகரித்து காணப்படும்.
ரிஷபம்
இன்று தாங்கள் முக்கிய முடிவுகளை மேற்கொள்வதற்கு சிறப்பான நாளாக இருக்கும். அலுவலகத்தில் பணிகளை சிறப்பாக செய்து முடித்து வெற்றியடைவீர்கள். கணவன், மனைவியிடம் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதிநிலை சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
இன்று தகவலுக்கு சீரான நாளாக இருக்கும். எந்த செயலை செய்யும் போதும் திட்டமிட்டு செயல்பட வேண்டும். அலுவலகத்தில் பணிகள் அதிகமாக காணப்படுவதால் கவனமாக இருக்க வேண்டும். மனைவியிடம் பேசும் போது வார்த்தைகளை விடாமல் இருப்பது மிகவும் நன்று. பணவரவு குறைவாக இருக்கும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்
இன்று தங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. ஆகவே முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணிகளை திட்டமிட்டு செய்வதன் மூலமாக மட்டுமே வெற்றி பெற முடியும். கணவன், மனைவி இடையே விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். பண வரவு குறைவாக இருப்பதால் தேவையற்ற செலவுகள் செய்யாமல் இருப்பது நல்லது.
சிம்மம்
இன்று தங்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு நல்ல நாளாக இருக்காது இன்றைய நாளை சிறப்பானதாக மாற்ற மனதில் உறுதியுடன் செயல்பட வேண்டும் அலுவலகத்தில் தங்களுடைய பணிகளை சிறப்பாக செய்ததற்கு திட்டமிட்டு செயல்பட வேண்டியது அவசியம்.வாழ்க்கைத்துணையிடம் அனுசரித்து செல்ல வேண்டும். நிதிநிலை சற்று குறைவாக இருக்கும்.
கன்னி
இன்று தங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். தங்களுடைய பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். கணவன், மனைவியிடையே ஒற்றுமை அதிகரித்து நிம்மதியாக இருப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும்.
துலாம்
இன்று தங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். அலுவலகத்தில் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி வெற்றியடைவீர்கள். அது தங்களுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். கணவன், மனைவியிடையே சந்தோஷம் அதிகரிக்கும். நிதிநிலை சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
இன்று தங்களுக்கு சற்று சீரான நாளாக இருக்கும். தங்களுக்கு பணிகளை சிறப்பாக செய்து முடிக்க சிறிது சிரமப்பட வேண்டிவரும். மனைவியிடம் அனுசரித்து செல்வது மூலமாக வீண் விவாதங்களை தவிர்க்கலாம். பணவரவு நெடுநிலையுடன் இருக்கும். ஆனால் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள்.
தனுசு
இன்று தங்களுக்கு மன உளைச்சல் சற்றே காணப்படலாம். அமைதியான முறையில் எல்லோரிடமும் நடந்து கொள்வது நல்லது. தங்களுடைய பணிகளில் தவறுகள் உண்டாகாமல் இருக்க கவனமாக செயல்பட வேண்டியது அவசியம். கணவன், மனைவியிடையே விட்டுக் கொடுத்துச் செல்வது மிகவும் நன்று. பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்
இன்று தங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். அலுவலகத்தில் தங்களுடைய வளர்ச்சி அதிகரிக்கும். ஆகவே புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். கணவன், மனைவியிடையே புரிதல் அதிகரிக்கும். பண வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
கும்பம்
இன்று தாங்கள் துடிப்புடன் செயல்படுவீர்கள் எதிர்காலத்திற்கு தேவையான முக்கிய முடிவுகளை மேற்கொள்வது பற்றி சிந்திப்பீர்கள் அலுவலகத்தில் சரியான நேரத்தில் தங்களுடைய பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள் மேலதிகாரிகள் தங்களை பாராட்டுவார்கள் உங்கள் துணைவியிடம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமளவிற்கு பணவரவு இருக்கும்.
மீனம்
இன்று தங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. ஆகவே நீங்கள் எந்த செயலிலும் உரிமையுடன் செயல்படுவது அவசியம். அலுவலகத்தில் தங்களுடைய பணிகளை சிறப்பாக செய்வதற்கு கவனமாக இருக்க வேண்டும். மனைவியிடம் பேசும் போது வார்த்தைகளை யோசித்துப் பேச வேண்டும். நிதிநிலை சிறப்பாக இருக்காது. ஆகவே தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.