இந்த ராசிக்காரர்களுக்கு இன்று கடன்கள் யாவும் வசூலாகும்!

0
162

மேஷம்

இன்று தங்களுக்கு உறவினர்கள் வழியில் சுபச் செலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைத்து மணமகழ்ச்சி அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். வியாபார ரீதியாக பொருளாதார சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.

ரிஷபம்

இன்று தாங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.

மிதுனம்

இன்று தங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக காணப்படும் வாரிசுகளுக்கு கல்வி தொடர்பாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். இதுவரையில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட தற்போது நண்பர்களாக செயல்படுவார்கள்.

கடகம்

இன்று தங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுப முயற்சிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை வழங்கும். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் பரிமாற்றம் லாபகரமாக இருக்கும்.

சிம்மம்

இன்றைய தினம் தங்கள் மன மகிழ்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் இருப்பீர்கள். சிலருக்கு பரிமாற்றத்தில் லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும். முயற்சிகள் வெற்றி பெறும். புதிய நபரின் அறிமுகம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும்.

கன்னி

இன்று தங்களுடைய பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் சிறு சிறு மன சங்கடங்கள் உண்டாகலாம்.
அனுபவம் மிக்கவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும். நண்பர்களால் அனுகூலம் ஏற்படும். பெண்களால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

துலாம்

இன்று தாங்கள் செய்யும் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள் புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காணப்படும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி வழங்கும் சம்பவங்கள் நடைபெறும். உறவினர்கள் மூலமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் நற்பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன் பிரச்சனை குறையும்.

தனுசு

இன்று தாங்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் செலுத்துவீர்கள். உறவினர்கள் மூலமாக மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு அரசு மூலமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபார ரீதியாக முன்னெடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். வாரிசுகள் அனுகூலமாக இருப்பார்கள்.

மகரம்

இன்றைய தினம் தங்களுக்கு அதிகாலையிலேயே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். தங்களுடைய பிரச்சனைகள் தீர உடன் பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்குவீர்கள்.

கும்பம்

இன்று தங்களுக்கு புதிய முயற்சிகள் செய்வதற்கு அனுகூலமான நாளாக விளங்கும். வாரிசுகள் தங்களுடைய பொறுப்புகள் அறிந்து செயல்படுவார்கள். உடன் பிறந்தவர்களால் இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

மீனம்

இன்று தங்களுக்கு பண வரவு தாராளமாக இருக்கும். நீண்ட தினங்களாக வராத கடன்கள் இன்று வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். அங்கே அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும்.

Previous articleவாகன ஓட்டிகளே உஷார்!! உங்கள் விதி மீறலை கண்டுபிடிக்கும் ரகசிய கேமரா!! 
Next articleகாதில் முடி இருந்தால் என்ன பலன்? யார் யாருக்கு எந்தெந்த அமைப்பில் இருந்தால் நல்லது!