வாகன ஓட்டிகளே உஷார்!! உங்கள் விதி மீறலை கண்டுபிடிக்கும் ரகசிய கேமரா!! 

0
165

வாகன ஓட்டிகளே உஷார்!! உங்கள் விதி மீறலை கண்டுபிடிக்கும் ரகசிய கேமரா!!

வாகன ஓட்டிகள் அனைவரும் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து வாகனம் ஓட்ட வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். முறையான தலைக்கவசம் மற்றும் சாலை விதிகளை பின்பற்றுமாறும் போலீசார் கூறுகின்றனர். ஆனால் பெரும்பாலும் மக்கள் அதனை பின்பற்றுவதில்லை.

தலைக்கவசம் அணிவது கட்டாயம் எனக் கூறினாலும் இரண்டு மாதம் அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறையே இந்த விதிமுறையை கடுமையாக்குகின்றனர். அப்பொழுது மட்டுமே பொதுமக்கள் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று எண்ணுகின்றனர்.மற்ற நேரங்களில் இந்த விதிமுறை கடுமையாக்கப்படாமல் மெத்தன போக்கிலே தான் உள்ளது.

அவ்வாறு தலைக்கவசம் அணியாதவர்களுக்கு புதிய விதிமுறையை பெங்களூர் மாநிலம் கொண்டு வந்துள்ளது. ஒரு நபர் சாலையில் செல்லும் பொழுது ஹெல்மெட் அணியவில்லை. அவருக்கு அபராதம் குறித்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. அன் நபரோ நான் தலைக்கவசம் அணியவில்லை என்பதை நீங்கள் எவ்வாறு சொல்கிறீர்கள்? ஆதாரம் ஏதேனும் உள்ளதா எனக் கேட்டுள்ளார்?

இவருக்கு பதிலளிக்கும் வகையில் பெங்களூர் காவல்துறை இவருக்கு ஒரு புகைப்படத்தை அனுப்பியுள்ளது. அது இவருக்கு மட்டும் இன்றி அனைத்து இருசக்கர ஓட்டிகளையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஏனென்றால் இவர் சாலையில் ஹெல்மெட் இல்லாமல் செல்லும் புகைப்படத்தை போலீசார் அனுப்பி  உள்ளனர். இவர் மட்டும் இன்றி சாலையில் பொதுமக்கள் யாரேனும் இரு சக்கர வாகனம் ஓட்டும் பொழுது முறையான தலைக்கவசம் அணியவில்லை என்றாலும் அவர்களது புகைப்படம் தானாக எடுக்கும் வகையில் ஓர் கேமராவை பொருத்தியுள்ளனர்.

அவ்வாறு தலைக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்படும். ஆதாரம் கேட்கப்பட்டால் அந்த குறுஞ்செய்தியுடன் இவ்வாறான புகைப்படமும் அனுப்பப்படும். பெங்களூர் காவல் துறை எடுத்த இந்த நடவடிக்கை அனைவரும் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.