இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நண்பர்கள் மூலமாக நல்ல செய்திகள் வந்து சேரும்!

0
73

மேஷம்

தங்களுடைய குடும்பத்தில் சுப காரிய நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி பெறும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். வாரிசுகள் மூலமாக மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். புதிய வாகனம் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.

ரிஷபம்

இன்று தங்களுடைய குடும்பத்தில் அமைதி நிலவும். பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் வெற்றியை வழங்கும். கூட்டாளிகளுடன் பேச்சு வார்த்தைகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புண்டு.

மிதுனம்

இன்று தங்களுக்கு வெளியூர் பயணங்களால் அலைச்சல் சோர்வு அதிகரிக்கலாம். குடும்பத்தில் செலவுகளை சமாளிக்க கடன் வாங்க நேரலாம். மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள்.

கடகம்

இன்று தங்களுடைய குடும்பத்தில் மங்கல நிகழ்வுகள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் பல புதிய மாற்றத்தால் நல்ல முன்னேற்றம் உண்டாகும் புதிய நட்பு ஏற்படும்.

சிம்மம்

இன்று தாங்கள் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமற்ற பலன் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். முடிந்த வரையில் அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெற்று எதையும் சமாளிப்பீர்கள். தெய்வ வழிபாடு செய்வது நல்லது.

கன்னி

இன்று தங்களுடைய இல்லத்தில் மங்கள நிகழ்வு நடைபெறும். எந்த வேலையையும் புது பொலிவுடன் மற்றும் தெம்புடனும் செய்து முடிப்பீர்கள். வித்யவஸ்தர்களுக்கு வேலையில் உயர் பதவிகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் ரீதியாக வெளி மாநில தொடர்பு உண்டாகும். பொன் பொருள் சேரும்.

துலாம்

இன்று தங்களுடைய குடும்பத்தில் அசையா சொத்துக்கள் வழியில் செலவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவாக காணப்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன் வாங்க நேரலாம். திருமண பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும். வியாபாரத்தில் இதுவரையில் இருந்த பிரச்சனைகள் தீரும்.

விருச்சிகம்

இன்று தங்களுடைய உறவினர்கள் மூலமாக எதிர்பார்த்த உதவி தாமதம் இல்லாமல் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன் பெறுவீர்கள். அலுவலகத்தில் உடன் பணியாற்றுபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் ரீதியாக இருந்த எதிரிகளின் தொல்லை குறைந்து முன்னேற்றம் அதிகரிக்கும்.

தனுசு

இன்று தங்களுடைய குடும்பத்தில் இனிய செய்திகள் வந்து சேரும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். வேலையில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் தொடர்பான விவகாரங்களில் வெளியூர் பயணம் செய்ய நேரலாம். அதில் அனுகூலமான பலன் கிடைக்கும் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

மகரம்

இன்று தங்களுடைய உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபச் செலவுகள் ஏற்படும். நண்பர்கள் மூலமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் வெற்றி உண்டாகும். பண வரவு தாராளமாக இருக்கும். தேவைகள் பூர்த்தி செய்யப்படும். தொழிலில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.

கும்பம்

இன்று தங்களுடைய நண்பர்கள் மூலமாக தங்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்களிடமிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பொன், பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்காத லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் வேலையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

மீனம்

இன்று தங்களுக்கு வேலையில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை நன்றாக காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்கள் வழியாக நல்ல செய்தி வந்து சேரும். தொழில் ரீதியாக வெளிநாட்டு நபர்கள் மூலமாக அனுகூலமான பலன் கிடைக்கும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.