மம்மூட்டியுடன் முதல் முறையாக இணையும் விஜய் சேதுபதி… இயக்குனர் இவர்தான்!

0
239

மம்மூட்டியுடன் முதல் முறையாக இணையும் விஜய் சேதுபதி… இயக்குனர் இவர்தான்!

நடிகர் விஜய் சேதுபதி அடுத்து காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

விஜய் சேதுபதி தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களை அடுத்து இப்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் அவர் நடித்துள்ள மும்பைகார் திரைப்படத்தை அடுத்து மெர்ரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மும்பைகார் படத்தை சந்தோஷ் சிவன் இயக்கியுள்ளார். மும்பைகர் திரைப்படம் தமிழில் வெளியான மாநகரம் திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் முனீஸ்காந்த் நடித்த வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கின்றார்.

ஒரு பக்கம் கமர்ஷியல் படங்களில் நடித்தாலும், மறுபக்கத்தில் அவர் நண்பர்களுக்காகவும், நல்ல கதையம்சம் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார். அப்படி சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கடைசி விவசாயி திரைப்படம் விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் பாராட்டப்பட்டது. இதையடுத்து இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டாரான மம்மூட்டி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் பிரபல ஓடிடிக்காக உருவாகிறது. டிசம்பரில் இதன் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இதற்கிடையில் விஜய் சேதுபதி பல படங்களில் கௌரவ வேடத்திலும், வில்லன் வேடத்திலும் நடித்து வருகிறார். அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் படத்திலும் விஜய் சேதுபதிதான் வில்லனாக நடிக்கிறார்.

Previous articleஐபிஎல் 2023: பஞ்சாப் அணியில் அதிரடி மாற்றம்… ஷிகார் தவானுக்கு ப்ரமோஷன்!
Next articleஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று நண்பர்கள் மூலமாக நல்ல செய்திகள் வந்து சேரும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here