23-11-2022- இன்றைய ராசி பலன்கள்!

0
180

மேஷம்

இன்று தங்களுக்கு தொழிலில் போட்டி அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை ஏற்படும். மனக்குழப்பம், அலைச்சல், சோர்வு போன்றவை உண்டாகும். தாங்கள் கோபத்தை குறைத்துக் கொண்டு அடுத்தவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மதியத்திற்கு பிறகு மன அமைதி இருக்கும்.

ரிஷபம்

இன்று தாங்கள் எந்த ஒரு செயலையும் நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். நண்பர்கள் தங்களுக்கான கோலமாக இருப்பார்கள் குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் காணப்படும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

மிதுனம்

இன்று தாங்கள் எந்த ஒரு செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். வாரிசுகளால் உண்டான மன கஷ்டம் நீங்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் அதிகரிக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.

கடகம்

இன்று தங்களுக்கு தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் அடைவீர்கள்.

சிம்மம்

இன்று வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். அதனால் அனுகூல பலன் கிடைக்கலாம். உற்றார், உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். குடும்பத்தில் சுகா காரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும் சேமிப்பு அதிகரிக்கும்.

கன்னி

இன்று தங்களுக்கு குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே சிறு,சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். வீண் செலவுகளால் பணப்பிரச்சினை உண்டாகலாம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் பரிமாற்றம் சுமாராக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

துலாம்

இன்று தாங்கள் எடுத்த காரியம் எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் தொடர்பாக அரசு வழி உதவிகள் எளிதில் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்ச்சி அடைவார்கள்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு உடன் பிறந்தவர்கள் மூலமாக உள்ளம் மகிழும் செய்திகள் வரலாம். சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன் கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான உழைப்புகள் எல்லாவற்றிற்கும் நற்பலன் கிடைக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

தனுசு

இன்று தாங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நாளாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் அதிகரிக்கும். விலையுயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்ச்சி அடைவார்கள் தொழிலின் தொடர்பான வெளிவட்டார நட்பு விரிவடையும். நீண்ட நாள் எதிர்பார்த்து இருந்த வங்கி கடன் கிடைக்கும். சுப காரியம் கைகூடும்.

மகரம்

இன்று தங்களுக்கு உடல்நிலை சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் வேலைத்தொழும் அதிகரிக்கும். பணம் நெடுகடியால் கடன் வாங்க நேரலாம். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலமாக பிரச்சனைகள் வருவதை தவிர்க்கலாம். வியாபாரம் தொடர்பாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். அதனால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

கும்பம்

இன்று தங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உடன் பிறந்தவர்கள் மூலமாக எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலை வரும் குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.

மீனம்

இன்று தங்களுடைய உறவினர்களிடம் நல்ல ஒற்றுமை நிலவும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பொன், பொருள் சேரும் சேமிப்பு அதிகரிக்கும். சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

Previous article#உலககோப்பைகால்பந்து : “வானவில் டீசர்ட்” பத்திரிக்கையாளருக்கு அனுமதி மறுத்த பாதுகாவலர்கள்..!
Next articleகுழந்தைகளுக்கு நெஞ்சு சளி மார்பு சளி குணமாக இதை ஒருவேளை கொடுத்தால் போதும்!!