#உலககோப்பைகால்பந்து : “வானவில் டீசர்ட்” பத்திரிக்கையாளருக்கு அனுமதி மறுத்த பாதுகாவலர்கள்..!

0
93

தன்பாலின ஈர்பார்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் டீ சர்ட் போட்டு சென்றவருக்கு அனுமதி மறுத்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் அதிக பேரால் விரும்பி பார்க்கப்படும் விளையாட்டு போட்டிகளில் உலக கோப்பை கால்பந்து போட்டி உள்ளது. இந்த ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 32 நாடுகள் பங்கேற்கின்றன.டிசம்பர் 18ம் தேதி தொடங்கிய இந்த போட்டி 29 நாட்கள் நடைபெறுகிறது.

கத்தாரில் இந்த போட்டிகளுக்காக உருவாக்கப்பட்ட 8 மைதாங்களில் இந்த போட்டி நடைபெறுகிறது. 8 பிரிவுகளில் உள்ள ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் ஒரு போட்டி மோத வேண்டும், போட்டி நடத்தும் கத்தார் நேரடியாக தகுதி பெறுகிறது. அரபு நாடுகளில் இந்த போட்டி இதுவே முதல் முறையாகும்.

போட்டி தொடங்குவதற்கு முதலில் இருந்தே அதிருப்தி ரசிகர்களிடம் உருவாகியது.போட்டி நடைபெறும் மைதானத்தில் மதுவிற்கு தடை விதித்தது.மேலும், போட்டியை காணவருபவர்களுக்கு ஆடை குறித்த அறிவுறுத்தல்களையும் வழங்கியது. அதாவது, அவர்கள் உடல் தெரியும் படியோ, டாட்டூக்கள் தெரியும் படியோ உடை அணிய கூடாது என தெரிவிததது. மேலும், LGBTQ சம்மந்தமான எந்த ஒரு விஷயத்திற்கும் அனுமதி இல்லை என தெரிவித்திருந்தது.

இதற்கிடையில், அமெரிக்கா – வெல்ஸ் அணிகள் இடையே நடந்த போட்டியை காண அமெரிக்க பத்திரிக்கையாளர் கிராண்ட் வெல்ஹ் அல் ரியான் மைதானத்திற்கு வானவில் நிற டிசர்ட் அணிந்து வந்துள்ளார்.அவரை தடுத்த காவல்துறையினர் அவரது உடை LGBTQ ஆதரவாக இருப்பதாகவும் அவரது உடை மாற்றினால் அனுமதி அளிப்பதாகவும் தெரிவித்தனர்.

இதனை அடுத்து, அவர் உடையை மாற்றிய பின் மைதானத்திற்குள் அனுமதித்துள்ளனர். இதனை அவர் தனது டிவிட்டர் பக்கதில் பதிவிட்டார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கத்தாரை சேர்ந்த கல்வியாளர் தெரிவிக்கையில், கத்தாரை சேர்ந்தவனாக இருப்பதற்கு பெருமை கொள்வதாகவும் தங்கது பண்பாடு உலகளாவியது இல்லை என்பதை மேற்கத்திய நாடுகள் தெரிந்து கொள்ள வேண்டும் மாற்று கலாச்சாரம் கொண்டவர்களும் மதிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.