இந்த ராசிக்காரர்கள் இன்று சற்றே சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டிய நாள்!

0
225

மேஷம்

இன்று காலை நேரத்தில் கலகலப்பு மாலை நேரத்தில் சற்று சலசலப்பு உண்டாகும் நாள். மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நண்பர்கள் சரியான நேரத்தில் உதவி புரிவார்கள் பயணங்கள் காரணமாக ஆதாயம் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று நீங்கள் உங்களுடைய எதிர்காலம் இனிமையாக அமைவதற்கான திட்டங்களை வகுக்கும் நாள். வேலைக்காக விண்ணப்பம் செய்பவர்களுக்கு அழைப்புகள் வரலாம். உறவினர்களின் ஒத்துழைப்பு ஏற்படும் வரன்கள் முடிவாவதற்கான வாய்ப்புண்டு.

மிதுனம்

இன்று தங்களுக்கு புதியதோர் திருப்பம் ஏற்படும் நாள். புதிய முயற்சியில் ஆரம்பம் அதிகரிக்கும் சரியான சமயத்தில் மற்றவருக்கு உதவி புரிவதால் பலருடைய அன்பையும் பெறுவீர்கள் வாரிசுகளின் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகலாம்.

கடகம்

இன்று தங்களுக்கு சுபச்செலவுகள் ஏற்படும் நாள். அருகிலிருப்பவர்கள் காரணமாக சில தொந்தரவுகள் வரலாம். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும் அண்டை வீட்டாரிடம் அளவாகப் பழகுவது நன்று.

சிம்மம்

இன்று உங்களுக்கு மிகவும் யோகமான நாள். திடீரென்று பணவரவு ஏற்படும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள் பொன், பொருள் வாங்குவதற்காக வகுத்த திட்டம் நிறைவேறலாம். இடம், பூமி வாங்குவதில் ஏற்பட்ட பிரச்சினை அகலும்.

கன்னி

என்று தங்களுக்கு தொட்ட காரியம் துலங்கும் நாள் தொந்தரவு கொடுத்தவர்கள் விலகிச்செல்வார்கள் வாரிசுகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகள் பலனளிக்கும் உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

துலாம்

இன்று நீங்கள் வருமானம் வரக்கூடிய வழியை கண்டு பிடிக்கும் நாள். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் தானாகவே கைக்கு வரும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பிருக்கிறது.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். முக்கிய நபர்கள் வீடு தேடி வருவார்கள் ஆன்மீகப்பயணம் ஆதாயம் கொடுக்கும் விதத்தில் அமையும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பார்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்ச்சியடைவீர்கள்.

தனுசு

தங்களுடைய தொழிலில் இருந்த இடையூறுகள் அகலும் நாள். எந்த ஒரு முக்கிய முடிவு எடுக்கும் போதும் குடும்ப உறுப்பினர்களிடம் கலந்தாலோசனை செய்து அதன்பிறகு முடிவெடுப்பது நன்று பயணங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மகரம்

இன்று தங்களுடைய ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். வியாபாரம் மற்றும் தொழிலில் இருந்த மறைமுக போட்டிகள் உள்ளிட்டவற்றை சமாளிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

கும்பம்

என்று தங்களுடைய பார்வைக்கு புதிய பாதை தென்படும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும் விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். உத்தியோக முயற்சியில் தாமதம் உண்டாகும்.

மீனம்

இன்று தங்களுக்கு தெய்வ வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும் நாள். விரையும் அதிகமாக உண்டாகிறது என்று கவலை கொள்வீர்கள் விட்டுப்போன வரன்களை பரிசீலனை செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் தலைமையின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

Previous articleபுயலின் காரணமாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை!!
Next articleபங்குனி மாதத்தின் சிறப்பும்! சிறப்பு வாய்ந்த விரதங்களும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here