இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வளர்ச்சிகள் அதிகரிக்கும்!

Photo of author

By Sakthi

மேஷம்

இன்று தங்களுடைய மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். குடும்ப ஒற்றுமை குறையும் நேற்றைய பிரச்சனை இன்றும் மீண்டும் தலைதூக்கும் அடுத்தவர்களுக்கு பொறுப்புகளை சொல்வதை தவிர்ப்பது மிகவும் நன்று.

ரிஷபம்

இன்று நீங்கள் அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அஞ்சல் வழியாக ஆச்சரியப்படத்தக்க செய்தி கிடைக்கும் ஆதாயம் எதிர்பார்த்தபடி வரும் நண்பர்கள் போட்டி போட்டுக்கொண்டு உதவி செய்வார்கள்.

மிதுனம்

இன்று தங்களுக்கு அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும் நாள், உறவினர்கள் வகையில் உண்டான பிரச்சினை முடிவுக்கு வரும் அலங்காரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் உண்டாகும் உத்தியோக மாற்றம் தொடர்பாக சிந்தனை செய்வீர்கள்.

கடகம்

இன்று தங்களுக்கு மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் நாள். பாதியில் நின்ற பணி மறுபடியும் ஆரம்பமாகும் தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும், செயல்படுகிறீர்கள் உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்

இன்று தங்களுக்கு சந்தோஷங்கள் அதிகரிக்கும் நாள். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும் தொழில் ரீதியாக பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள் புதிய வேலைக்கு செய்த முயற்சி கைகூடும் வாய்ப்புண்டு.

கன்னி

இன்று உங்களை அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும் நாள். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள் வாரிசுகள் வழியில் சுபச் செய்திகள் வந்து சேரும் உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.

துலாம்

இன்று தங்கள் முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். பணவரவு பல வழிகளிலுமிருக்கும் ஆற்றல் மிக்கவர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு பணத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் நாள். பக்குவமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம் குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

தனுசு

இன்று தங்களுக்கு வரவும், செலவும், சமமாக இருக்கும் நாள். வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்று உத்தியோகத்தில் உடன் பணியாற்றுபவர்களால் ஒரு சில தொந்தரவுகள் உண்டாகலாம், மனக்குழப்பம் அதிகரிப்பதற்கான வாய்ப்புண்டு.

மகரம்

எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றியடையும் நாள். எதையும் எளிதில் செய்து முடிப்பீர்கள் கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் அரசியல்வாதிகளால் நன்மைகள் ஏற்படும்.

கும்பம்

இன்று தங்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும் நாள். தொழிலில் லாபம் கிடைக்கும் அடுத்தவர்களின் நலனில் காட்டிய அக்கரைக்கு ஆதாயம் வந்து சேரும் வாரிசுகள் நலன் கருதி எடுத்த முயற்சி அனுகூலமாக முடியும்.

மீனம்

இன்று தங்களுடைய வளர்ச்சிகள் அதிகரிக்கும் நாள். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும் குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் செய்தவர்கள் விலகிச்செல்வார்கள். எதிர்கால நலன் கருதி புதிய திட்டங்களை வகுப்பீர்கள்.