நாராயணா என்று உச்சரித்தால் கிடைக்கும் பலன் என்ன?

0
280

நாராயணன் என்ற பெயரில் நாரம் என்ற சொல்லுள்ளது நாரம் என்றால் தண்ணீர் தீர்த்தம் என்ற பொருள்கள் உண்டாகிறது. பெருமாள் கோவில்களில் தீர்த்தம் கொடுப்பது கூட அவருடைய பெயர் காரணமாகத்தான் என்று சொல்லப்படுகிறது.

நாரம் என்ற சொல்லுக்கு பிரும்ம ஞானம் என்ற பொருளுமிருக்கிறது இந்த உலக வாழ்வு நிலையற்றது என்னுடைய திருவடியே நிலையானது என்ற தத்துவத்தையும் அவருடைய பெயர் உணர்த்துகிறதாம்.

நாராயணன் என்ற சொல்லை நாரன்+அயணன் என்று பிரிக்கலாம். நாரம் என்றால் தீர்த்தம் அயனமென்றால் படுக்கையுடையவன். பார்க்கடலாகிய தீர்த்தத்தில் பாம்பணையில் படுத்திருப்பவன் என்பதும் நாராயணன் என்ற சொல்லுக்கு அர்த்தமாகும்.

நாராயணனின் நாமத்தை அதிகமாக உச்சரிப்பது நாரதர் தான் நாராயண நாராயண என்று உச்சரித்தபடியே தான் அவர் சகல லோகங்களுக்கும் சென்று வருவார்.

அவர் தோன்றுவதற்கு முன்பாக இந்த உலகில் தண்ணீர் என்பது மிகவும் குறைவாக இருந்ததாக சொல்லப்படுகிறது. அவருடைய பிறப்பிற்கு பின்னர் தான் தண்ணீர் அதிகரித்தது. இதனால்தான் அவர் நாரதர் என்ற பெயர் பெற்றார் என தெரிவிக்கிறார்கள்.

நாரதர் போல நாமும் நாராயணன் பெயரை அதிகமாக உச்சரித்தால் வெள்ளமாக அருள்மழை பெற முடியும் அதுவும் புரட்டாசியில் இந்த பெயரை உச்சரித்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

Previous articleஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று வளர்ச்சிகள் அதிகரிக்கும்!
Next articleஎட்டாவது படித்திருந்தால் போதும் 15000 முதல் 62000 வரையில் மாத சம்பளம்! புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here