இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அடிக்கப் போகுது அதிர்ஷ்டம்!

Photo of author

By Sakthi

மேஷம்

இன்று தங்களுக்கு சந்தித்தவர்கள் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும், செயல்படுவீர்கள் பொதுவாழ்வில் புகழ் அதிகரிக்கும் தொழில் வளர்ச்சி மேலும் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாவதற்கான வாய்ப்புண்டு.

ரிஷபம்

எடுத்த காரியத்தில் வெற்றி பெற கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் இனம்புரியாத கவலைகள் தோன்றுவதற்கான வாய்ப்புண்டு திடீர் செலவுகளை சமாளிக்க பிறரிடம் கைமாற்றாக வாங்க கூடிய சூழ்நிலை ஏற்படும்.

மிதுனம்

இன்று தங்களுக்கு ஒரு இனிய மாற்றம் இல்லம் தேடி வரும் நாள். சுப விரயம் ஏற்படும் அருகிலிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நன்று. குடும்பத்தினர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பதன் மூலமாக மன அமைதி கிடைக்கும்.

கடகம்

இன்று வருமானம் இரட்டிப்பாகும் வெளிநாட்டு பயணத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். சிறப்பு விருந்தினர்களின் சந்திப்பால் விருப்பம் நிறைவேறும் வீட்டிற்கு தேவைப்படும் விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

சிம்மம்

வாய் வாக்கை செயலாக்கிக் காட்டும் நாள். மற்றவர்கள் பாராட்டும் விதமாக காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள் தொழில் வளர்ச்சிக்கு அனுபவமிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கன்னி

இன்று தங்களுக்கு அண்டைவீட்டார் ஆதரவு கிடைத்து மகிழும் நாள். அரைகுறையாக நின்ற கட்டிடப் பணிகள் மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்புண்டு. முன்னேற்றப் பாதைக்கு தடையாக இருந்தவர்கள் விலகிச்செல்வார்கள்.

துலாம்

நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்குழப்பம் நீங்கும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும் பணப்புழக்கம் போதுமானதாகயிருக்கும் உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள் நேற்றைய சேமிப்பு ஒன்று இன்று செலவுக்கு கைகொடுக்கும் அலுவலகப் பணிகளை வேகமாக செய்து முடித்து பாராட்டைப் பெறுவீர்கள்.

தனுசு

இன்று தங்களது நண்பர்கள் மூலமாக நல்ல செய்தி வந்து சேரும் நாள்.பண பரிமாற்றத்தில் இருந்த குழப்பங்கள் அகலும் வியாபார விரோதம் விலகும் மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும்.

மகரம்

இன்று தாங்கள் நினைத்தது நிறைவேறும் நாள். அமைதிக்காக ஆலயத்தை நோக்கி செல்வீர்கள் முடங்கிக்கிடந்த தொழில் முன்னேற்றமடையும் வாரிசுகள் குடும்ப பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள்.

கும்பம்

இன்று தங்களுக்கு நன்மைகள் யாவும் நடைபெறும் நல்ல நாள். தொழிலில் புதிய திட்டங்களை லாபத்தை பெறுவீர்கள் தொலைதூரத்திலிருந்து உத்தியோகத்தில் நீண்டநாள் எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கும்.

மீனம்

இன்று தங்களுடைய வளர்ச்சி அதிகரிக்கும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவார்கள் மறைமுக போட்டிகள் அகலும் பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடிவடையும். உத்தியோகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு ஏற்படும்.