வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும்!

0
237

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும்!

தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்கள் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் தெரிவிக்கவில்லை.

Previous articleஅரசு ஊழியர்களுக்கு இந்த நாட்களில் விடுப்பு கிடையாது! மீறி எடுத்தால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என எச்சரிக்கை!!
Next articleஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று அடிக்கப் போகுது அதிர்ஷ்டம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here