இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பொருள் சேர்க்கை ஏற்படும்!

Photo of author

By Sakthi

மேஷம்

இன்று தங்களுடைய விருப்பங்கள் நிறைவேற்றுவதற்கு விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். தொழில் முன்னேற்றம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு முடிவெடுப்பீர்கள் நீங்கள் செய்யும் செயல்கள் உங்கள் திறமையை வெளிப்படுத்தும்.

ரிஷபம்

இன்று தங்களுடைய புகழும் பாராட்டும் அதிகரிக்கும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதன் காரணமாக, செலவுகள் உண்டாகலாம். நண்பர்களிடம் நாசூக்காக பேசி நடந்துகொள்வீர்கள் வெளிநாட்டிலிருந்து அனுகூலமான தகவல் வந்து சேரும்.

மிதுனம்

இன்று தங்களுக்கு பல்வேறு வழிகளில் லாபம் கிடைக்கும் நாள் மாற்று இனத்தவரால் காரணமாக தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் கையில் எடுத்த காரியத்தை எளிதில் முடித்து விடுவீர்கள் வரன்கள் வாயில் தேடி வரலாம் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

கடகம்

இன்று தங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும் நாள். பிரபலங்களின் சந்திப்பு காரணமாக, பிரச்சனைகள் முடிவுக்கு வரும் வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும், அதிகரிக்கும் அடுத்தவர்களின் நலனில் அக்கறை எடுத்துக் கொண்டு செயல்படுவீர்கள்.

சிம்மம்

இன்று தங்களுடைய வாழ்க்கை தரம் உயர தேவையான வழியை செய்து கொள்வீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்புடன் புதிய திட்டத்தை மேற்கொள்வீர்கள் சொத்துக்கள் வாங்கும் முயற்சி கைகூடும் உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

கன்னி

இன்று தங்களுடைய எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் நாள். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும் பணப் பரிமாற்றத்திலிருந்த சிக்கல்கள் தீரும் பஞ்சாயத்துக்கள் தங்களுக்கு சாதகமாக முடியும்.

துலாம்

இன்று தங்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். திட்டமிட்ட காரியம் தங்களுடைய திட்டப்படியே நடந்தேறும் வெளிவட்டார பழக்க வழக்கத்தால் விருப்பங்கள் நிறைவேறும். நண்பர்களுடைய பாராட்டு மழையில் நனைவீர்கள்.

விருச்சிகம்

இன்று தங்களுடைய நண்பர்கள் மூலமாக நல்ல தகவல் வந்து சேரும் நாள். வசதிகளைப் பெருக்கிக் கொள்ள நினைப்பீர்கள், புதிய ஒப்பந்தங்கள் தொலைபேசி மூலமாக வந்து சேரலாம் உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

தனுசு

இன்று தாங்கள் நன்றாக யோசித்து செயல்பட வேண்டிய நாள். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகளை கேட்டு செயல்படுவது மிகவும் நன்று வெளியூர் பயணங்களின் போது விழிப்புணர்வு தேவை உத்தியோகத்தில் வீண் பழிகள் உண்டாகலாம்.

மகரம்

இன்று தங்களுக்கு பயணம் காரணமாக, பலன் கிடைக்கும் நாள். பழைய வாகனத்தை கொடுத்துவிட்டு புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும் திட்டமிட்டபடியே சில காரியங்கள் முடிவடையும்.

கும்பம்

இன்று தாங்கள் நினைத்தது நிறைவேறும் நாள். சகோதர வழியில் ஒரு சுப செய்தி வந்து சேரும் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றியடையும் முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மீனம்

இன்று தங்களுக்கு நட்பின் வெளியே நல்ல காரியம் நடைபெறும் நாள். ஆபரண பொருட்களை வாங்குவதில் நாட்டம் செல்லும் பெரிய மனிதர்களின் தொடர்பு உங்களுடைய தகுதியை அதிகரிக்கச்செய்யும் கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்ச்சி அடைவீர்கள்.