இந்த ராசிக்காரர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள்!

Photo of author

By Sakthi

மேஷம்

இன்று தங்களுக்கு வரவு திருப்திகரமாக இருக்கும் நாள். வீட்டு உபயோகப்பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் வழியில் நல்ல தகவல் கிடைக்கும் முன்னோர்களின் சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் நீங்கும்.

ரிஷபம்

தொடர் வெற்றிகள் ஏற்படுவதால் துணிச்சல் உண்டாகும் எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

மிதுனம்

இன்று தங்களுடைய காரியங்கள் நடைபெறுவதில் தாமதம் உண்டாகும் நாள் கவலை தரும் தகவல் வந்து சேரலாம். தொழில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது மிகவும் நன்று, முக்கிய முடிவுகள் மேற்கொள்வதில் தடுமாற்றங்களும் உண்டாகும்.

கடகம்

இன்றுதான் உற்சாகத்துடன் பணியாற்றும் நாள். உடல் நலம் சீராகும் அரசியல்வாதிகளால் அனுகூலம் ஏற்படும். உங்களுடைய கருத்துக்களை பலரும் கேட்க முன் வருவார்கள் திருமண கனவுகள் நனவாகும். வருமானம் திருப்தியாக இருக்கும்.

சிம்மம்

இன்று போட்டிகளை சமாளித்து வெற்றி பெறும் நாள். தொழில் தொடர்பாக முக்கிய முடிவை மேற்கொள்வீர்கள். உற்றார் உறவினர்களின் பகை நீங்கும் உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கன்னி

இன்று தாங்கள் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள் கையிலெடுத்த காரியங்களை முடித்து வைக்க இல்லத்தில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் வாரிசுகளின் விவாகப் பேச்சுக்கள் முடிவிற்கு வரும் அலுவலக பணிகளில் வேகமாக நடைபெறும்.

துலாம்

இன்று தங்களுடைய பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனங்களை வாங்கும் முயற்சியில் ஆர்வம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு வெற்றிகள் தொடங்கும் நாள். கடல் தாண்டி வரும் செய்தி காரிய வெற்றிக்கு கைகொடுக்கும் விதமாக அமையும். நேற்று பாதியில் நின்ற பணிகள் இன்று தொடர்ந்து நடைபெறும் தொழிலில் லாபம் கிடைக்கும்.

தனுசு

இன்று பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். பொல்லாதவர்கள் விலகிச்செல்வார்கள், துணிச்சலும், தன்னம்பிக்கையும், அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிட்டும் பரிமாற்றத்தில் இருந்த சிக்கல் ஒழுங்காகும்.

மகரம்

இன்று தாங்கள் உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். உடல் நலம் சீராகும், அரசு வழியில் உதவிகள் கிடைப்பதற்கான வழி பிறக்கும், பெரியோர்களின் ஆலோசனை பிரச்சனையிலிருந்து விடுபட உதவியாக இருக்கும்.

கும்பம்

அலைச்சலைக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பதற்காக முழுமூச்சுடன் செயல்படுவீர்கள். சமுதாயப் பணிகளில் ஆர்வம் உண்டாகும் உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம்.

மீனம்

இன்று தாங்கள் விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள். புத்திசாலித்தனமாக செயல்பட்டு புகழை அதிகரித்துக் கொள்வீர்கள். தடைபட்ட ஒப்பந்தங்கள் தானாக வந்து சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்.