நீங்க இந்த ராசிக்காரர்களா? அப்படின்னா இன்னைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டம் தான்!

Photo of author

By Sakthi

மேஷம்

இன்று தங்களுடைய தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள், வெகு நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள், தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகிச்செல்வார்கள்.

ரிஷபம்

இன்று தங்களுடைய வளர்ச்சி அதிகரிக்கும் நாள், வாழ்க்கை தரம் உயர்வதற்கு வழிவகை செய்து கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம், நினைத்த காரியம் நினைத்தபடியே நடைபெறும், வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

மிதுனம்

நினைத்த காரியம் நினைத்தபடியே நிறைவேறும் நாள், லாபத்தை மனதில் வைத்து தொழிலில் பங்குதாரர்களை இணைத்துக்கொள்வீர்கள், மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியை தெரிவிப்பார்கள்.

கடகம்

இன்று தங்களுடைய நீண்ட நாளைய நட்பு பகையாகமல் பார்த்துக்கொள்ள வேண்டிய நாள், நாடு மாற்றம், வீடு மாற்றம், உள்ளிட்டவை தொடர்பாக சிந்தனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரலாம், தடைகள் பெருகும்.

சிம்மம்

இன்று தங்களுடைய பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும் நாள், வியாபாரத்திலிருந்த போட்டிகளை சமாளிப்பீர்கள், விரதம் வழிபாடுகளில் அதிக நம்பிக்கை ஏற்படும், உடல்நலம் சீராக மாற்று மருத்துவத்தை முன்னெடுப்பது நல்லது.

கன்னி

இன்று தாங்கள் சந்திப்பவர்கள் காரணமாக சந்தோஷம் அதிகரிக்கும் நாள், வாரிசுகளின் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும், வீடு, இடம், வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

துலாம்

இன்று மனதிற்கினிய தகவல் இல்லம் தேடி வரும் நாள், எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். தாய்வழி ஆதரவு கிடைக்கும், தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று தெய்வ வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள், குடும்பச் சுமை அதிகரிக்கும் வாகனங்கள் தொடர்பான விதத்தில் திடீர் செலவுகள் உண்டாகலாம், அதற்கேற்ற ஆதாயம் இருக்காது.

தனுசு

இன்று அதிகாலை நேரத்திலேயே கலகலப்பான தகவல் வந்து சேரும் நாள், ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் பணியாற்றுவீர்கள், விலகிச் சென்ற விவாகப் பேச்சுக்கள் மீண்டும் வந்து முடிவாகலாம்.

மகரம்

இன்று தங்களுடைய முன்னேற்றம் அதிகரிக்கும் நாள், முக்கிய புள்ளிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும் தொடக்கத்தில் அச்சுறுத்தலாக தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தை கொடுக்கும் விதமாக இருக்கும், உடல் நலம் சீராகும்.

கும்பம்

இன்று செலவுகள் குறைவதற்கு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்.வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்ய முயற்சி செய்வீர்கள், குடும்பத்தினர்களை அனுசரித்து செல்வது மிகவும் நன்று.

மீனம்

இன்று தங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள், வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும், அதிகரிக்கும் தொலைதூரப் பயணங்கள் செல்வதற்காக வகுத்த திட்டம் நிறைவேறும், வருமானம் திருப்திகரமாக இருக்கும்.