நீங்க இந்த ராசியா அப்படின்னா உங்களுக்கு இன்னைக்கு யோகம்தான் போங்க!

0
230

மேஷம்

இன்று தங்களுக்கு பொதுவாழ்வில் புகழ் அதிகரிக்கும் நாள், வெகுநாட்களாக வாங்க நினைத்த பொருள் ஒன்றை வாங்கி மகிழ்ச்சியடையும் வாய்ப்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்களுடைய செயல்பாடுகள் அடுத்தவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இருக்கும்.

ரிஷபம்

இன்று தங்களுடைய திறமைகள் பளிச்சிடும் நாள், பெரிய மனிதர்களுடன் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உறவினர்கள் வழியில் வந்த மனக்கசப்புகள் மாறும் உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள்.

மிதுனம்

இன்று தங்களது குழப்பங்கள் அதிகரிக்கும் நாள், குறிப்பிட்ட சமயத்தில் பணிகளை முடிக்க முடியாமல் தடுமாற்றம் உண்டாகலாம், உடல்நலம் குறித்த விஷயங்களில் அக்கறை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

கடகம்

இன்று தாங்கள் அமைதியை விரும்பினால் வழிபாட்டுத் தலங்களை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டிய நாள், தொலைபேசி வழித் தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். உத்யோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

சிம்மம்

இன்று தங்களுக்கு எதிர்ப்புகள் அனைத்தையும் சமாளித்து ஏற்றம் காண வேண்டிய நாள். தொழில் வியாபாரம் தொடர்பாக முக்கிய புள்ளிகளை சந்திக்க நேரிடலாம், உடல் ஆரோக்கியம் சீராக உணவில் கட்டுப்பாடு இருப்பது மிகவும் நல்லது.

கன்னி

இன்று தங்களுக்கு நண்பர்களால் கூடுதல் நன்மை கிடைக்கும் நாள், தொழில் ரீதியாக புதிய பொறுப்புகள் வந்து சேரும். வாரிசுகளின் பழக்கவழக்கங்களை நெறிப்படுத்துவீர்கள், உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் உடனடியாக கிடைக்கும்.

துலாம்

இன்று தங்களுடைய திருமண முயற்சிகள் கைகூடும் நாள், தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் வரவேண்டிய பாக்கிகளும் வசூலாகும் உற்றார், உறவினர்கள், உதவிக்கரம் நீட்டுவார்கள் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகலாம்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு மனதிற்கினிய சம்பவங்கள் நடந்து மகிழ்ச்சி ஏற்படுத்தும் நாள், மதிப்பும், மரியாதையும், அதிகரிக்கும். தொழில் குறித்து எடுத்த முடிவிற்கு உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பார்கள் வீட்டை சீரமைக்கும் பணி ஆரம்பமாகும்.

தனுசு

இன்று தங்களுக்கு பொன்னான நாள், சகோதரர்கள் உங்களுடைய முன்னேற்றத்திற்கு பக்கபலமாக இருப்பார்கள் உத்தியோகத்தில் விடுமுறை எடுத்ததற்குரிய வேலைகளை செய்ய வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.

மகரம்

நேற்றைய பிரச்சினை இன்று நல்லதொரு முடிவிற்கு வரும் நாள், தொலைபேசி மூலமாக தொழில் வளர்ச்சி கூறிய தகவல் வந்து சேரும், உத்தியோகம் நிரந்தர பணியாக மாறும் சூழ்நிலை ஏற்படும்.

கும்பம்

இன்று தங்கள் எதிலும் யோசித்தும், இறைவனை பூஜை செய்தும், செயல்பட வேண்டிய நாள், குடும்ப பிரச்சனை அதிகரிக்கும். ஒரே சமயத்தில் பல வேலைகளை நெருக்கடியை வழங்கும் உடல் நலத்திற்காக செலவு செய்ய நேரலாம்.

மீனம்

இன்று தங்களுக்கு வெளிநாட்டு முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும் நாள், எப்படியும் முடித்து விடலாம் என்று நினைத்த காரியம் இழுபறி நிலையில் நீடிக்கலாம் இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனையும் அதிகரிக்கும்.

Previous articleபோராட்டமா பண்றீங்க? ரேஷன் கடை விற்பனையாளர்களின் அடிமடியில் கைவைத்த தமிழக அரசு!
Next articleசெவ்வாய் விரதத்தின் பலன்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here