செவ்வாய் விரதத்தின் பலன்கள்!

0
106

சுய ஜாதகத்தில் செவ்வாய் பகவானின் நிலை சரியாக அமையாதவர்களுக்கு உண்டாகும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கி, நன்மைகளைப் பெறுவதற்கு செவ்வாய் பகவானின் அம்சத்தை கொண்ட முருகப் பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் விரதம் மேற்கொண்டு வழிபட வேண்டும் என்கிறார்கள்.

செவ்வாய்க் கிழமை விரதமிருப்பவர்கள் செவ்வாய் கிழமை தோறும் அதிகாலையில் நீராடி முடித்து விட்டு அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

அதன் பிறகு வீட்டிற்கு வந்தவுடன் வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் சாப்பிட்டு விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அதோடு கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், போன்ற முருகப் பெருமானுக்குரிய ஸ்த்தோத்திரங்களை, மந்திரங்கள், உள்ளிட்டவற்றை பாராயணம் செய்ய வேண்டும்.

மாலை 6 மணிக்கு மறுபடியும் முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இப்படி 9 செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து முருகப் பெருமானை வழிபடுவதன் காரணமாக, தங்களுக்கு செவ்வாய் தோஷம் இருந்தால் அதன் தீவிரம் குறைந்து நன்மையான பலன் கிடைக்கும்.

சொந்தவீடு இல்லாதவர்களுக்கு அதனை கட்டிக்கொள்ளும் யோகம் கிடைக்கும். பூமி தொடர்பான சொத்துக்களால் லாபம் உண்டாகும். கோழைத்தனம், பய உணர்வு, நீங்கி தைரியம், தன்னம்பிக்கை, பிறக்கும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியம் மேம்படும்.