இந்த ராசிக்காரர்கள் இன்று வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது!

0
56

மேஷம்

இன்று தங்களுக்கு சந்தோஷம் அதிகரிக்கும் நாள், வாரிசுகளின் நலன் கருதி எடுத்த முயற்சிகள் கைக்கூடும் வெளிவட்டார பழக்க வழக்கம் வெளிநடையும், இடம் பூமி வாங்கும் யோகம் உண்டு எதிர்பார்த்த காரியம் இனிதே நடந்து முடியும்.

ரிஷபம்

இன்று தங்களுடைய நட்பு வட்டாரம் விரிவடையும் நாள், வளர்ச்சி பாதைக்கு வித்திட்ட சிலரின் சந்திப்பு கிடைக்கும். அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேர்க்க முயற்சி செய்வீர்கள் தொலைபேசி வேலை தகவல் மகிழ்ச்சி தரும் விதமாக இருக்கும்.

மிதுனம்

இன்று தாங்கள் முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள், ஆரோக்கியம் சீராகும், பிரபலங்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்ச்சியடைவீர்கள், பழைய கடன் பிரச்சனைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

கடகம்

இன்று தாங்கள் தன்னம்பிக்கையுடன் பணியாற்றி தடைகளை தகர்க்க வேண்டிய நாள், பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும், உத்தியோகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.

சிம்மம்

இன்று தங்களுக்கு யோகமான நாள், மனதில் ஊக்கமும், உற்சாகமும், தோன்றலாம். பண வரவிலிருந்ததடைகள் நீங்கும், பழைய வாகனத்தை கொடுத்துவிட்டு புதிய வாகனம் வாங்குவது தொடர்பாக சந்திப்பீர்கள்.

கன்னி

இன்று தங்களுக்கு சிறப்புகள் வந்து சேர சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டிய நாள், நேற்றைய சேமிப்பு இன்று சரியான நேரத்தில் கைகொடுக்கும் உடன்பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் சம்பவம் ஒன்று நடந்தேறும்.

துலாம்

இன்று தங்களுக்கு கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைத்து மகிழ்ச்சியடைவீர்கள் குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்க சற்று அலைச்சல்களை சந்திக்க நேரலாம், எதிர்பாராத விதத்தில் வரன்கள் முடிவடையும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு ஆரோக்கியம் சீராகி மகிழ்ச்சி படுத்தும் நாள், அதிகாலையிலேயே நல்ல தகவல் வந்து சேரலாம். வருமானம் திருப்திகரமாக இருக்கும், குடும்பத்திற்கு தேவைப்படும் விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள்.

தனுசு

இன்று தங்களுக்கு நன்மைகள் யாவும் வந்து சேரும் நாள், நிச்சயத்த காரியம் ஒன்றில் திடீரென்று மாற்றங்கள் செய்ய நேரலாம். குடும்ப உறுப்பினர்களின் குறைகளை தீர்த்து வைக்க முன் வருவீர்கள் உத்தியோகத்தில் உங்களுடைய திறமை பளிச்சிடும்.

மகரம்

இன்று தங்களுக்கு செல்வ நிலை அதிகரிக்கும் நாள், கடமையை நிறைவேற்றுவதில் அதிக அக்கறை காட்டுவீர்கள், பொது வாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும், வந்து சேரலாம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து தகவல் வந்து சேரும்.

கும்பம்

இன்று தங்களுக்கு யோகமான நாள், வீடு இடம் தொடர்பாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். பிறருக்காக பொறுப்பேற்று வாங்கி கொடுத்த தொகை வந்து சேரலாம், கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

மீனம்

இன்று தாங்கள் யோசித்து செயல்பட வேண்டிய நாள், வாகனப்பழுது செலவுகள் காரணமாக, கையிருப்பு குறைவதற்கான வாய்ப்புண்டு விரும்பாத ஒருவரை முக்கிய இடத்தில் சந்திக்க நேரிடலாம். குடும்பத்தைச் சார்ந்தவர்களிடம் மீன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.