ஷாருக்கானுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி?? அடேங்கப்பா ஜவான் படத்துக்கு இவ்வளவா?

0
274

ஷாருக்கானுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி?? அடேங்கப்பா ஜவான் படத்துக்கு இவ்வளவா??

கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லன், குணச்சித்திர வேடம் உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. தமிழ், தெலுங்கு ஹிந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களின் நடித்துவரும் விஜய் சேதுபதி.

அடுத்ததாக பிரபல தமிழ் இயக்குனர் அட்லி ஹிந்தியில் இயக்கும் ஜவான் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி ள்ளது. ஹிந்தி திரை உலகின் முன்னணி நடிகராக விளங்கும் நடிகர் ஷாருக்கான் மற்றும் தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்திலும் மற்றும் நயன்தாரா இப்படத்தில் விசாரணை அதிகாரியாகவும் நடித்து வருகின்றார்.

தான் இந்திய திரைப்படமாக உருவாகி வரும் ஜவான் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த தகவல் நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.

இப்படம்2023ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.ஜவான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பின் ஓட்டிட்டுக்கு கொடுக்கப்பட குழு முடிவு செய்துள்ளதாகவும் இதனை பிரபல ஓட்டிட்டு நிறுவனம் ஒன்று ரூபாய் 120 கோடி கொடுத்து வாங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Previous articleஇப்படியும் திருடலாமா வீடியோ கலைஞர்களை மிரட்டும் ஹேக்கர்களா??
Next articleஇந்த ராசிக்காரர்கள் இன்று வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here