மேஷம்
இன்று தங்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும் வெளி வட்டார பழக்க, வழக்கம் விரிவடையும் பழைய பாக்கிகளை நாசுக்காக பேசி வசூல் செய்வீர்கள், உடல்நலம் சீராகும், பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச்செல்வார்கள்.
ரிஷபம்
இன்று தங்களுக்கு எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும் நாள், பணியாளர்கள் தொல்லை நீங்கும், வாரிசுகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள், அடுத்தவர் நலம் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.
மிதுனம்
இன்று தாங்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள், ஒவ்வாத உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலமாக உடல் நலம் பாதிப்புக்குள்ளாகலாம், செலவுகள் அதிகரிக்கும் அண்டை வீட்டாருடன் அளவாக பழகுவது நல்லது.
கடகம்
இன்று தங்களுக்கு உறவினர்களுடைய உதவி கிடைக்கும் நாள், ஆக்கபூர்வமான செயலொன்றை செய்து முடிப்பீர்கள். மங்கள ஓசை வீட்டில் கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும், பெற்றோர் வழியில் உண்டான பிரச்சனை நீங்கும்.
சிம்மம்
இன்று இடமாற்றங்களால் தங்களுக்கு இனிய மாற்றம் உண்டாகும் நாள்,பணவரவு தாராளமாக இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும், வீட்டிற்கு தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள்.சுபச்செய்திகள் வந்து சேரும்.
கன்னி
இன்று தங்களுக்கு பொருளாதார பற்றாக்குறை நீங்கும், வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள், தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
துலாம்
இன்று தங்களுக்கு எதிர்பாராத பணம் வரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள், ஆனாலும் செலவுகள் கூடும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள், மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்திகளை கொண்டு வந்து சேர்ப்பார்கள்.
விருச்சிகம்
இன்று தாங்கள் முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள், முக்கிய புள்ளிகளின் ஒத்துழைப்பு காரணமாக, பொருளாதார நிலை அதிகரிக்கும், பாகப்பிரிவினைக்காக எடுத்த முயற்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகிச்செல்வார்கள்.
தனுசு
இன்று தங்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும் நாள், பண பற்றாக்குறை உண்டாகும், உறவினர்கள் வழியில் சிறுசிறு மன சங்கடங்கள் உண்டாகும், ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும், மறதியால் சில பணிகள் விட்டு போகலாம்.
மகரம்
இன்று தங்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும் நாள், நெடுதூர பயணங்கள் கை கூடுவதற்கான அறிகுறிகள் தோன்றலாம் தொழில் வளர்ச்சிக்கு ஆரம்ப புள்ளியாக இருந்தவர்களை சந்தித்து மகிழ்ச்சியடைவீர்கள் வருமானம் திருப்திகரமாக இருக்கும்.
கும்பம்
இன்று தங்களுக்கு சுப செய்தியொன்று வந்து சேரும் நாள், உபயோகத்தில் உயரதிகாரிகளால் அனுகூலம் ஏற்படும், காலையில் செய்ய மறந்த வேலையொன்றை மாலையில் செய்வதற்கான சூழ்நிலை ஏற்படும், உடல் நலனில் கவனம் தேவை.
மீனம்
இன்று தங்களுக்கு வெளிநாட்டு முயற்சியில் அனுகூலமான நிலை கிடைக்கும் நாள், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும், பொருளாதார முன்னேற்றம் ஏற்படும், பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனங்களை வாங்க முன்வருவீர்கள்.