19-7-2022- இன்றைய ராசி பலன்கள்!

0
200

மேஷம்

இன்று தங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும் நாள், இன்று சந்திக்கும் நண்பர்களால் சந்தோஷம் அதிகரிக்கும். அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாக செய்து முடிப்பீர்கள், தொழில் வளர்ச்சியில் உண்டான தொந்தரவுகள் நீங்கும்.

ரிஷபம்

இன்று தாபிகளுக்கு வளர்ச்சி அதிகரிக்கும் நாள், வாழ்க்கை தரம் உயரும் சமுதாய பணிகளில் ஆர்வம் ஏற்படும். சுகாதாரப் பேச்சுக்கள் முடிவாகும், உத்தியோகத்தில் பணி நிரந்தரம் தொடர்பான தகவல் வந்து சேரும்.

மிதுனம்

இன்று தங்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும் நாள் நிலையான வருமானத்திற்கு வழி அமைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும் வாழ்க்கைக்கு வழிகாட்டிய நபர்களை சந்தித்து மகிழ்ச்சியடைவீர்கள்.

கடகம்

இன்று தாங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்படும் நாள், மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவார்கள், நேற்றைய பிரச்சனை இன்று நல்லதொரு முடிவுக்கு வரும், உறவினர்களின் வருகையால் செலவுகள் ஏற்படலாம்.

சிம்மம்

இன்று தாங்கள் எதிலும் யோசித்து செயல்பட வேண்டிய நாள், லாபம் இல்லாத அலைச்சல்கள் ஏற்படும். நண்பர்களிடம் மிகுந்த விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம், காரிய தாமதத்தால் கலக்கும் ஏற்படும். உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும்.

கன்னி

இன்று தங்களுக்கு இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும் நாள், வெளியுலக தொடர்பு அதிகரிக்கும். அடிக்கடி தொல்லை கொடுக்கும் வாகனத்தை மாற்றுவது தொடர்பாக சிந்தனை மேலோங்கும் நல்லவர்களின் தொடர்பால் நன்மை ஏற்படும்.

துலாம்

இன்று தங்களுக்கு காரியம் உண்டாகும் நாள், தேவைக்கேற்ற பணம் வீடு தேடி வரும், எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும் புதிய நண்பர்களின் அறிமுகத்தால் பொருளாதார நிலை அதிகரிக்கும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள், பொதுவாவில் புகழ் அதிகரிக்கும், தொட்டது தொலங்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவாவதற்கான வாய்ப்புண்டு. தொலைபேசி வழி தகவல் பணம் வருவதற்கு வழி வகுத்துக் கொடுக்கும்.

தனுசு

இன்று தங்களது செல்வாக்கு அதிகரிக்கும் நாள், திடீர் பணவரவு உண்டாகும், ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. வீடு மாற்றம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும், பெற்றோர் ஆதரவு கிடைக்கும்.

மகரம்

இன்று தங்களுக்கு உடன்பிறப்புகள் உறுதுணையாக இருக்கின்ற நாள், உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிப்பீர்கள். மனதிற்கு இனியவர்களின் சந்திப்பால் தொழில் வளர்ச்சிக்கு வாய்ப்புண்டு பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடிவடையும்.

கும்பம்

இன்று தங்களுக்கு எண்ணங்கள் யாவும் எளிதில் நிறைவேறும் நாள், பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்பத்தாருடன் உண்டான மோதல் நீங்கும், வீட்டிற்கு தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள்.

மீனம்

இன்று தாங்கள் அருகிலிருப்பவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்வது மிகவும் நல்லது. புதிய தொழில் ஆரம்பிக்கலாமா? என்று சிந்திப்பீர்கள். நண்பர்கள் ஒளிமயமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் வழங்குவார்கள்.

Previous articleமீண்டும் பார்க்கத்தூண்டும் அழகிய ஃபோட்டோ யார் தெரியுமா?
Next articleதிருவள்ளூர் மாவட்டத்தில் இலவசமாக கொடுத்த பொருள் இதுதானா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here