4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அஸ்வின்!

Photo of author

By Parthipan K

டி20 கிரிக்கெட் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் 4 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான அஷ்வின் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் டி20 அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். எந்த காரணத்துக்காக அணியிலிருந்து அஸ்வின் ஓரங்கட்டப்படுகிறார் என்பது இதுவரை யாருமே அறியாத புதிராக உள்ளது. ஏனெனில் 46 டி20 போட்டிகளில் அவர் 52 விக்கெட்டுகள் எடுத்ததோடு மட்டுமல்லாமல் எகோனமியை 7க்கும் குறைவாக வைத்திருந்தார். 7க்கும் குறைவாக எகோனமியை ஒரு சில இந்திய பந்து வீச்சாளர்களே வைத்திருந்தனர்.

அந்த காலக்கட்டங்களில் இந்திய அணியை வழி நடத்திய தோனிக்கும் அஸ்வினுக்கும் மோதல் போக்கு இருந்து வந்ததாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில் 4 வருடங்களுக்கு பிறகு அஷ்வின் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வளைகுடா மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதாலும் அங்கு நடைபெற்ற ஐபிஎல் டி20 போட்டிகளில் அஸ்வின் சிறப்பாக பந்து வீசியதாலும் அவர் அணியில் இணைக்கப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகராக மகேந்திர சின் தோனி இருப்பார் என பிசிசியை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.