நித்தியானந்தா நாட்டை கிண்டலடித்த பிரபல கிரிக்கெட் வீரர்

Photo of author

By CineDesk

நித்தியானந்தா நாட்டை கிண்டலடித்த பிரபல கிரிக்கெட் வீரர்

குழந்தைகள் பாலியல் வழக்கில் சிக்கி போலீசாரால் தேடப்பட்டு வரும் நித்யானந்தா, வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது வெளிநாட்டில் இருந்து கொண்டே கைலாஷ் என்ற புதிய நாட்டை அவர் தோற்றுவித்ததாக இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார்

இந்து மதத்தை பின்பற்றும் யாரும் தனது கைலாஷ் நாட்டின் குடிமகனாக ஆகலாம் என்றும், கைலாஷ் நாட்டின் தற்போதைய மக்கள் தொகை 10 கோடியாக இருப்பதாகவும், இந்த நாட்டின் குடிமகனாக ஆக விரும்புபவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்

மேலும் தனது நாட்டிற்கு என தனி பாஸ்போர்ட், மொழி ஆகியவற்றையும் குறிப்பிட்டு ஒரு தனி அமைச்சரவை உருவாக்கி பிரதமருக்கு இணையாக ஒரு பதவியில் நித்யானந்தா இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

நித்யானந்தாவின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் கிண்டலுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். கைலாஷ் நாடு எங்கே உள்ளது, அந்நாட்டிற்கு போக எப்படி விசா எடுக்க வேண்டும்? என்று கிண்டலுடன் கூடிய ஒரு பதிவை அஸ்வின் பதிவு செய்துள்ளார்

அஸ்வினின் இந்த பதிவிற்கு டிவிட்டர் பயனாளிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த கருத்துக்களும் காமெடியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது