பெரும் சோகம் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்து! 2 குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாப பலி!

Photo of author

By Sakthi

தெற்கு பிரான்ஸ் பகுதியில் குரு கட்டிடத்தில் உண்டான தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நேற்று காலை தெற்கு பிரான்சில் பைரெனிஸ் ஓரியெண்டெல்ஸ் என்ற பகுதியில் உள்ள ஒரு 2 மாடிக்கட்டிடத்தின் தரைத்தளத்திலிருக்கின்ற மளிகை கடை ஒன்றில் திடீரென்று வெடிப்பு ஏற்பட்டு தீ பரவத் தொடங்கியது. அதன்பிறகு தீ மளமளவென அருகிலுள்ள கட்டிடங்களுக்கும் பரவியதாக சொல்லப்படுகிறது.

இந்த தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் பலியானார்கள் அதாவது 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருக்கிறார்கள். வெடிப்புக்கான காரணம் என்ன என்பது இதுவரையில் தெரிய வரவில்லை என்று சொல்லப்படுகிறது. கடைக்குள் எரிவாயு சிலிண்டர்கள் இருந்திருக்கலாம். அவைகள் வெடித்ததால் விபத்து உண்டாகியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.